ராணுவத்தில் தோனி வகித்து வரும் பதவி.. ஒவ்வொரு மாதமும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்!
டெல்லி: சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு இந்திய ராணுவத்தில் லெஃப்டினன்ட் கர்னல் கவுரவ பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தோனி மீண்டும் ராணுவ பணிகளில் ஈடுபடுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இன்னொரு பக்கம் கர்னல் பதவிக்காக தோனி பெறும் ஊதியம் எவ்வளவு என்றும் ரசிகர்கள் தேடி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடி தாக்குதலை நடத்தியது. அப்போது போர் பதற்றம் கூடுதலாக அதிகரித்தால், தோனி இந்திய ராணுவத்துடன் இணைவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

ஏனென்றால் 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற பின் கேப்டன் தோனிக்கு லெஃப்டினண்ட் கர்னல் பதவி அளிக்கப்பட்டது. அதன்பின் 2015ஆம் ஆண்டு தோனி தனது ஓய்வு நேரத்தில் இருந்த போது, இந்திய ராணுவ வீரர்களுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டார். பாராசூட் பயிற்சியில் கூட ஈடுபட்டார்.
இதன்பின் 2019ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீரில் சில வாரங்களில் ராணுவ வீரர்களுடன் இணைந்து பணியாற்றினார். பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட தோனி, ராணுவ உடையில் ஏகே 47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, ஹெல்மெட், கையெறி குண்டுகள் என்று அத்தனை உடுப்புகளை அணிந்து பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீரின் தென் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
அப்போது சக வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியது. அதேபோல் 106 பாராசூட் ரெஜிமெண்டில் பணியாற்றிய தோனி, 5 முறை பாராசூட் ஜம்ப் செய்து பாராசூட் ட்ரூப்பராக தகுதி பெற்றார். அதேபோல் தோனி வகித்து வரும் லெஃப்டினண்ட் கர்னல் பதவிக்கு ரூ.1.21 லட்சம் முதல் ரூ.2.12 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும். ஆனால் தோனி இந்த சம்பளத்தை பெற முடியாது.
ஏனென்றால் தோனிக்கு இந்திய ராணுவத்தில் அளிக்கப்பட்ட பொறுப்பு கவுரவ பதவிதான். கவுரவ பதவிகளில் இருப்பவர்கள் இயல்பான கடமையையோ, பணிகளையோ செய்வதில்லை. அதேபோல் ராணுவம் மூலமாக மக்கள் சேவையையும் செய்வதில்லை. விளையாட்டு வீரர்களுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்.
இளைஞர்கள் மத்தியில் இந்திய ராணுவத்தின் பெருமையை எடுத்து செல்லவும், ராணுவத்தில் இணைய ஊக்கப்படுத்தவும் நட்சத்திரங்களுக்கு கவுரவ பதவிகள் அளிக்கப்படுவது வழக்கம்தான். இதனால் ஊதியம் என்ன என்பது கூறப்பட்டாலும், அவர்களுக்கு அந்த ஊதியத்தை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications