"மோடிஜி நீங்களே பிரதமராக வர வேண்டும்".. குண்டை போட்ட முலாயம் சிங் யாதவ்
பிரதமர் மோடிக்கு முலாயம் சிங் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி: "நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்" என்று மோடியை பார்த்து முலாயம்சிங் யாதவ் கூறிய பேச்சு நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வருகிற மே மாதத்துடன் மக்களவையின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. அதனால் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் என்பதால் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் உருக்கமாக பேசினர்.
அதிலும் உ.பி. முன்னாள் முதல்வரும், இதில் எதிர்பாராத பேச்சு சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியதுதான் இன்றைய ஹைலைட்!

உருக்கமான பேச்சு
கடைசி நாள் அமர்வு இன்று நடந்து வரும் நிலையில், "மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்துகிறேன்" என்று சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேசியுள்ளார்.அப்போது அவர் பேசும்போது சொன்னதாவது:

விருப்பத்திற்குரிய பிரதமர்
"அவையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக மீண்டும் வெற்றி பெறுவார்கள். வெற்றி பெற்று அனைத்து உறுப்பினர்களும் இந்த அவைக்கு மீண்டும் வர வேண்டும். மோடியே இந்த முறையும் பிரதமராக வருவார். அவர்தான் எங்களின் விருப்பத்திற்குரிய பிரதமர். மோடியின் ஆட்சியில் அனைத்து கோப்புகளும் வேகமாக நகருகின்றன. அடுத்த முறையும் அவரே பிரதமராக வந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்" என்றார்.

வாழ்த்துகிறேன்
சரி, பாஜகவின் கடைசி மக்களவை கூட்டத்தொடர் என்பதால் பொத்தாம் பொதுவாகத்தான் சொல்கிறார் என்று பார்த்தால், திடீரென எதிரே உட்கார்ந்திருந்த மோடியை பார்த்தார் முலாயம்சிங். பிறகு, "நீங்கள் மீண்டும் பிரதமராக நான் வாழ்த்துகிறேன்" என்றதும் அவையில் இருந்தவர்களுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. இத்தனைக்கும் அவருக்கு அருகிலேயே சோனியா காந்தி உட்கார்ந்திருந்தார்.

மாயாவதி
அகிலேஷ் யாதவோ பாஜகவுக்கு எதிராக அணி திரட்டுவதில் மும்முரமாகவும், முழு மூச்சாகவும் இருக்கிறார். இதற்காகவே எப்போதும் ஆகாத மாயாவதியுடன் கை கோர்த்து கொண்டுள்ளார்.

சலசலப்பு
இந்த நிலையில், அவரது அப்பா முலாயம் சிங் யாதவ், மோடிக்கு ஆதரவாக பேசியதுடன், கூடவே ஒரு வாழ்த்தையும் தெரிவித்துள்ளது இந்திய அரசியல் வட்டாரத்தையே சலசலப்புக்கு உள்ளாக்கி உள்ளது. ஆக மொத்தம், ஆடு உறவு, குட்டி பகையா என்று கேட்க வைத்துவிட்டார் முலாயம்சிங் யாதவ்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications