இந்து கடவுள்கள் குறித்து அநாகரீகமான கருத்து... பிரபல காமெடி நடிகர் அதிரடி கைது!
டெல்லி: இந்து கடவுள்கள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அநாகரீகமான கருத்துக்கள் தெரிவித்த இந்தி நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முனாவர் பாரூகி உள்பட 5 பேர் மீது மத உணர்வுகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தை சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகர் முனாவர் பாரூகி ஆவார். இந்தூர் டுகான் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் முனாவர் பாரூகி உள்ளிட்ட குழுவினர் இந்து கடவுள்கள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்தும் அநாகரீகமான கருத்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக உள்ளூர் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாலினி லட்சுமணன் சிங் கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், முனாவர் பாரூகியை கைது செய்தனர். அவருடன் எட்வின் அந்தோணி, பிரகார் வியாஸ், பிரியம் வியாஸ் மற்றும் நலின் யாதவ் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் மீது 295-ஏ (மத உணர்வுகளை மீறுதல்), 269 (சட்டத்திற்கு புறம்பான அல்லது கவனக்குறைவான செயல் மூலம் உயிருக்கு ஆபத்தான வகையில் தொற்றுநோயை பரப்ப வாய்ப்புள்ளது) உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.


Click it and Unblock the Notifications
