மும்பையில் XE வேரியண்ட் பாதிப்பு கண்டறியப்படவில்லை.. இந்தியாவில் யாருக்கும் இல்லை.. மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் முதல் XE வேரியண்ட் கேஸ் மும்பையில் கண்டறியப்பட்டதாக அந்த மாநகராட்சி நிர்வாகம் கூறியிருந்த நிலையில் அதை மத்திய அரசு மறுத்துள்ளது.
ஜனவரி 19ஆம் தேதி பிரிட்டனில் முதல் முறையாக XE வகை வேரியண்ட் கண்டறியப்பட்டது. இது ஓமிக்ரானின் உருமாற்றமடைந்த திரிபு என தெரிவிக்கப்பட்டது.
பிரிட்டனில் இந்த வைரஸால் குறைந்த அளவிலானோரே பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஓமிக்ரானின் BA.2 மாறுபாடு கொரோனாவின் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது.

புதிய வேரியண்ட்
இந்த நிலையில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள XE வேரியண்ட் ஓமிக்ரானின் BA.1 மற்றும் BA.2 ஆகிய இரு மாறுபாடுகளின் உருமாற்றம் என கூறப்பட்டது. மேலும் இந்த XE ஓமிக்ரானைவிட வேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. XE வேரியண்ட் ஆனது BA.2 வேரியண்ட்டை விட 10 மடங்கு வேகமாகப் பரவக் கூடியது.

மும்பை
இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஒருவருக்கு உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 376 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. அதில் 230 பேர் மும்பைவாசிகள். அவர்களில் 228 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

மும்பை மாநகராட்சி
மேலும் ஒருவருக்கு கப்பா வைரஸும் XE வேரியண்ட்டும் இருப்பதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. XE வேரியண்ட் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுபவர் 50 வயது பெண். தென்னாப்பிரிக்காவில் இருந்து பிப்ரவரி 10 ஆம் தேதி வந்த ஆடை வடிவமைப்பாளரான அந்த 50 வயது பெண்ணுக்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் கொரோனா நெகட்டிவ் என வந்தது.

பாந்த்ரா
இருப்பினும் அவரை பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்ட போது கடந்த மார்ச் 2 ஆம்தேதி கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு அடுத்த நாளே மீண்டும் சோதனை நடத்தப்பட்டதில் நெகட்டிவ் என வந்துள்ளது.
Recommended Video

புதிய வேரியண்ட் இல்லை
இந்த நிலையில் இந்தியாவில் XE வேரியண்ட் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் அறிவிப்பை மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறுகையில் 50 வயது பெண்ணுக்கு எந்தவித அறிகுறியோ இணை நோய்களோ இல்லை. அவர் முழு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர். அவருக்கு எடுக்கப்பட்ட மாதிரி XE வேரியண்ட்டுடன் ஒத்து போகவில்லை என தெரிவித்துள்ளது. எனவே இந்தியாவில் XE வேரியண்ட் யாருக்கும் இல்லை.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications