வேலியில் போன ஓணான்! வாயை கொடுத்து மாட்டிக் கொண்ட நுபுர் சர்மா! கையை பிசையும் பாஜக! கைதாக வாய்ப்பு.?

Subscribe to Oneindia Tamil

டெல்லி : இஸ்லாமியர்களின் இறைத்தூதரான நபிகள் நாயகம் பற்றி பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசிய சம்பவம் உலகளாவிய பிரச்சினையாக வெடித்துள்ள நிலையில் மும்பை காவல்துறை விரைவில் சம்மன் அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஞானவாபி விவகாரம் குறித்த செய்தி விவாதத்தின் போது பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, ​​முகமது நபி மற்றும் இஸ்லாம் குறித்து அவதூறாக கூறியதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதனையடுத்து, பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோல் பாஜகவின் டெல்லி ஊடகத் தலைவர் நவீன் ஜிண்டால் சமூக வலைதளங்களில் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் கருத்தை பகிர்ந்ததால் அவரும் இடைநீக்கம் செய்யபட்டார்.

பாஜக நுபுர் சர்மா

பாஜக நுபுர் சர்மா

இதனையடுத்து இந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமல்லாது, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து கத்தார், குவைத், ஈரான் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் கட்சி எடுத்த நடவடிக்கையை வரவேற்கும் அதே வேளையில் அவர்களது கருத்துகளை கண்டித்தன.

Recommended Video

    Nupur Sharma Comment On Muhammad | முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? | *Politics
    கடும் கண்டனம்

    கடும் கண்டனம்

    இடைநீக்கத்திற்குப் பிறகு இந்த விவாகாரம் குறித்து பேசிய நுபுர் சர்மா, எனது வார்த்தைகள் யாரேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்தால் அல்லது மத உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், எனது அறிக்கையை நிபந்தனையின்றி நான் திரும்பப் பெறுகிறேன். யாருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல என கூறியிருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் பலர் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் அவர் புகார் தெரிவித்திருந்தார்.

    சர்வதேச அளவில் சீற்றம்

    சர்வதேச அளவில் சீற்றம்

    இந்நிலையில் பாஜக தலைவர்கள் சர்வதேச அளவில் இந்தியாவை இழிவுபடுத்துவதாகக் குற்றம்சாட்டி ளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடுமையான வார்த்தை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நூபுர் ஷர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் நபிகள் நாயகத்திற்கு எதிரான அவர்களின் அவதூறான கருத்துக்களால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள கடும் சீற்றம் காரணமாக அவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

    போலீசார் சம்மன்

    போலீசார் சம்மன்

    சர்வதேச அளவில் இந்தியாவை அவதூறு செய்த கட்சியில் உள்ள சமூக விரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை நாடகம் ஆடுவதற்குப் பதிலாக அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ள நிலையில், முஹம்மது நபியைப் பற்றி அவர் கூறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு மும்பை காவல்துறை விரைவில் சம்மன் அனுப்பும் என்று மும்பை உயர் போலீஸ் அதிகாரி சஞ்சய் பாண்டே ANI இடம் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+