இதுதான் இந்தியா.. உலகை திரும்பி பார்க்க வைக்க இந்த ஒரு படம் போதும்!
Recommended Video

டெல்லி: பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து இந்திய வான்படை அபாரமான தாக்குதலை நடத்தி தீவிரவாத முகாம்களை அளித்து விட்டு திரும்பி வந்தது.
இதன்பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர், டெல்லி திரும்பிய நரேந்திர மோடி அங்குள்ள கான் மார்க்கெட் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இஸ்கான் கோயில் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தார்.
இஸ்கான் கோவிலில் பகவத்கீதை ஆராதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்று பகவத் கீதைக்கு தீபாராதனை காட்டுவதற்காக நரேந்திர மோடி பயணித்தார்.
|
மகிழ்ச்சி வெள்ளம்
அப்போது ரயிலில் உடன் பயணித்த பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவருமே மோடியுடன் அமர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டினர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக அவர்கள் மோடியிடம் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர். அப்போது குழந்தைகளின் கன்னத்தை, மோடி, கிள்ளி விளையாடினார். சில இளைஞர்கள் மோடியின் கால்களைத் தொட்டு ஆசி வாங்கினனர்.
|
இஸ்லாமிய வாலிபர்கள்
இதன் பிறகு இரு இஸ்லாமிய வாலிபர்கள் மோடியின் அருகே அமர்ந்து இருந்தனர். அவர்கள் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதற்காக, மோடியின் கைகளை பிடித்து மகிழ்ச்சியோடு குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களின் கைகளை பிடித்து குலுக்கியபடி மோடி மகிழ்ச்சியுடன் உரையாற்றினார். இந்த புகைப்படம் இன்றைய தினத்தில் மிகுந்த கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது.

தாக்குதல்கள்
ஏனெனில் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு நாடு முழுக்க காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் மீது ஆங்காங்கு வலதுசாரிகள் தாக்குதல் நடத்தினர். உச்சநீதிமன்றமே, இந்த விஷயத்தில் தலையிட்டு தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. இதன்பிறகு பிரதமர் மோடியும் கூட, நமது இலக்கு பாகிஸ்தான்தானே தவிர, காஷ்மீர் முஸ்லிம்கள் கிடையாது என்று பேசினார். இதனிடையே, சமூகவலைத்தளங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக வலதுசாரிகள் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.

இந்திய ஒருமைப்பாடு
ஆனால் பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய நிலையில், டெல்லியில் இஸ்லாமிய இளைஞர்கள் மோடியிடம் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இது இந்திய ஒருமைப்பாட்டை, உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டுவது போல உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications