ராமர் கோயில் கும்பாபிஷேகம்! முஸ்லீம்களும் ஜெய் ஸ்ரீராம் சொல்லணும்! ஆர்எஸ்எஸ் செயலாளர் சர்ச்சை பேச்சு
டெல்லி: ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அப்போது மசூதிகளில் "ஜெய் ஸ்ரீராம்" என்று முழக்கமிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முக்கிய தலைவர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்கிடையே "ராம் மந்திர், ராஷ்டிர மந்திர் - ஒரு பொதுவான பாரம்பரியம்" என்ற புத்தக வெளியிட்டு விழா அயோத்தியில் நடைபெற்றது.

அங்கே ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும் போது மசூதிகள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் "ஸ்ரீராம், ஜெய்ராம், ஜெய் ஜெய் ராம்" என்று முழக்கமிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ராமர் கோயில்: அயோத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களில் 99 சதவீதம் பேர் நமசு நாட்டை சேர்ந்தவர்கள் தான். அதாவது அவர்களுக்கும் நமக்கும் ஒரே மூதாதையர்கள் தான். அவர்கள் எப்போதும் நமது நாட்டை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தங்கள் மதத்தை மட்டுமே மாற்றியுள்ளனர், தாய் நாட்டை மாற்றவில்லை.
இஸ்லாம், கிறித்துவம், சீக்கியம் உட்பட மாற்று மாதங்களைச் சேர்ந்தோர் அயோத்தியில் கும்பாபிஷேக விழா நடக்கும் போது அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காக அவரவர் மத வழிபாட்டுத் தளங்களில் பிரார்த்தனை செய்ய வேண்டும். நமது நாட்டில் உள்ள மாற்று மதத்தினருக்கும் நமக்கும் பொதுவான மூதாதையர்கள் தான்.. நமக்கு பொதுவான கனவு, பொதுவான அடையாளம் தான் உள்ளது.
ஜெய் ஸ்ரீ ராம்: நாம் அனைவரும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினருக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை. முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் (ஆர்எஸ்எஸ் தொடர்புடைய இஸ்லாமிய இயக்கம்) விடுத்த வேண்டுகோளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். ராமர் கோயில் கும்பாபிஷேகம் சமயத்தில் 'ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்' என்று 11 முறை தர்காக்கள், மதரஸாக்கள் மற்றும் மஸ்ஜித்களில் முழங்குங்கள்.
அதன் பிறகு உங்கள் வழிபாட்டு முறையை வழக்கம் போல பின்பற்றுங்கள். குருத்வாராக்கள், தேவாலயங்கள் மற்றும் அனைத்து மதத் தலங்களுக்கும் ஜனவரி 22ஆம் தேதி பிரமாதமாக அலங்கரிக்க வேண்டும். இந்தியாவில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்திற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்..
பரூக் அப்துல்லா: ராமர் இந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமானவர் என்று தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா கூறியிருக்கிறார். நாங்கள் எப்போது அவர் இந்துக்களுக்கு மட்டும் சொந்தமானவர் என்று சொன்னோம். அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் அப்படிக் கருதுகிறார்கள். அப்துல்லா முடிந்தால் அவர்கள் அனைவருக்கும் புரிய வைக்கட்டும்.
மேலும், ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என்பதை அவர் இந்தியக் கூட்டணிக்குச் சொல்ல வேண்டும். கும்பாபிஷேக விழாவில் யார் எல்லாம் வருகிறார்கள் என பார்க்கலாம். அதில் கலந்து கொள்ள அழைப்பிதழ் எல்லாம் கட்டாயம் இல்லை. எனவே, அதைக் காரணமாகச் சொல்ல வேண்டாம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "பெரிய இதயம் மற்றும் பரந்த மனது கொண்டவர்களுக்கு, முழு உலகமும் அவர்களின் சொந்த குடும்பம் தான். இந்தியாவின் கலாச்சாரமும் அப்படிதான். இது இந்த போதனையால் நிறைந்துள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications