பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம்- பிரார்த்தனைகளுக்கு நன்றி- மகன் அபிஜித் முகர்ஜி
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

மேலும் பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரென பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்ததாக அவர் சிகிச்சை பெற்று வரும் டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்தது. நேற்று பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே புதன்கிழமை இரவு பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் பானர்ஜி ஒரு ட்வீட் போட்டுள்ளார். அதில், உங்கள் பிரார்த்தனைகளால் என்னுடைய தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் விரைவில் முழுமையாக குணமடைய தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நன்றி என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications