எனக்கு மாதம் ரூ,5 லட்சம் சம்பளம்.. அதில் ரூ.2.75 லட்சம் வரியாக செலுத்துகிறேன்.. ஜனாதிபதி பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு நேற்று வருகை தந்தார். அப்போது பேசிய அவர்,, ​​தனது மாத வருமானத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை வரிகளில் செலுத்துவதாக கூறினார்.

"குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சேமிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்." என்று அவர் கூறினார்

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராங்கு கிராமத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், "எனக்கு மாதத்திற்கு ரூபாய் 5 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அதில் ரூ.2.75 லட்சம் வரியாக செலுத்துகிறேன். இந்தியாவில் அனைவரும் முறையாக வரி செலுத்த வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்த வரிகள் உதவும்.

சம்பளம்

சம்பளம்

"குடியரசுத் தலைவர் எவ்வளவு சம்பளம் பெறுகிறார் என்பதைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். அதிகாரிகள், ஆசிரியர்கள் நான் சேமிப்பதை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.

மக்கள் வரிப்பணம்

மக்கள் வரிப்பணம்

சில நேரங்களில் கோபத்தில் ஒரு குறிப்பிட்ட ரயில் நிலையத்தில் ஒரு ரயில் நிறுத்தப்படவில்லை என்று சொன்னால், அதை வலுக்கட்டாயமாக நிறுத்துகிறார்கள். ஒரு ரயிலுக்கு தீ வைத்தால் யாருக்கு நஷ்டம்? மக்களுக்குதான். ஆனால் அரசு சொத்து என்று கூறுகிறார்கள். இது வரி செலுத்துவோரின் பணம் என்று அனைவருக்கும் தெரியும் என்பதால் நான் இதைக் குறிப்பிடுகிறேன்" என்றார்.

யோகி வரவேற்றார்

யோகி வரவேற்றார்

முன்னதாக இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரயில் மூலம் இன்று லக்னோவை அடைந்தார். தனது சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு ஐந்து நாள் பயணமாக வந்துள்ளார். குடியரசுத் தலைவரை, ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மாநில அமைச்சர்கள் மற்றும் ஏராளமான மூத்த அதிகாரிகள் ரயில் நிலையத்தில் வரவேற்றனர்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள்

உயர்நீதிமன்ற நீதிபதிகள்

அங்கிருந்து, அவர் நேரடியாக ராஜ் பவனுக்குச் சென்றார், அங்கு இனறும் நாளையும் கழிப்பார். இன்று மாலையில், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளுடன் ராஜ் பவனில் நடைபெற்ற தேநீர் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டார்.

சொந்த ஊரில் ஜனாதிபதி

சொந்த ஊரில் ஜனாதிபதி

நாளை டெல்லி செல்லும் முன்பு அம்பேத்கர் நினைவு கலாச்சார மையத்தின் அடிக்கல் நாட்டுவார்.உத்தரபிரதேசத்திற்கு ஐந்து நாள் விஜயமாக ஜூன் 25 ம் தேதி கான்பூருக்கு சென்றார் குடியரசுத் தலைவர். ஞாயிற்றுக்கிழமை கான்பூர் தேஹத் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பராங்கு கிராமத்திற்கு சென்றார். அங்கு தனது உறவினர்கள், நண்பர்களுடன் நெகிழ்ச்சியுடன் உரையாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+