மீண்டும் வானில் மர்ம பொருள்! அதுவும் இந்தியாவில்.. மிரண்டு பார்த்த மக்கள்! உஷாரான உளவு துறை! பரபர

2022இல் இந்திய பகுதியில் மர்ம பொருள் பறந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மர்மப் பொருட்கள் வானில் பறப்பது பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2022இல் இந்தச் சம்பவம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில காலமாகவே வானத்தில் பறக்கும் மர்மப் பொருட்கள் தான் பேசுபொருளாகி வருகிறது. அமெரிக்காவில் அடுத்தடுத்து மூன்று மர்மப் பொருட்களைக் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது பெரும் பரபரப்பானது.

இதுவரை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது என்ன பொருள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதற்கிடையே இப்படி வானில் பறக்கும் மர்மப் பொருள் குறித்துப் பல நாடுகளும் பல தகவல்களைக் கூறி வருகிறது.

 இந்திய பகுதியில் மர்மப் பொருள்

இந்திய பகுதியில் மர்மப் பொருள்

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் தான் தங்கள் வானில் மர்மப் பொருட்களைப் பார்த்ததாக கூறியிருந்தனர். இதற்கிடையே இப்போது இந்தியாவிலும் இதுபோன்ற மர்மப் பொருட்கள் வானில் பறப்பது காணப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓராண்டிற்கு முன்பு, வங்கக் கடலில் அமைந்துள்ள இந்தியாவுக்குச் சொந்தமான தீவு கூட்டம் ஒன்றில் அங்குள்ள உள்ளூர்வாசிகள் வானில் ஒரு அசாதாரண பொருளைக் கண்டுள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா வீழ்த்தியதைப் போன்ற ஒரு பெரிய பலூனை அவர்கள் வானில் கண்டதாகக் கூறப்படுகிறது.

உஷாரான உளவு அமைப்பு

உஷாரான உளவு அமைப்பு

அந்த சமயத்தில் அது என்னவென்று அங்கே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.. அந்தமான் மற்றும் நிக்கோபாரின் சில தீவுகளிலிருந்து இந்த பலூன் தெளிவாகத் தெரிந்துள்ளது. பொதுமக்கள் பலரும் அதை போட்டாவோக எடுத்து தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். இப்படியே ஒரே நேரத்தில் பலரும் அந்த மர்மப் பொருள் குறித்து படங்களைப் பகிர்ந்த நிலையில், இந்திய உளவு அமைப்புகள் உஷராகின.. அவர்களும் இது தொடர்பான விசாரணையில் இறங்கின.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இருப்பினும், அப்போது அவர்களாலும் துல்லியமாக எதையும் கண்டறிய முடியவில்லை. ஏனென்றால், இந்த பலூன் வங்காள விரி குடாவில் இந்தியாவின் ஏவுகணை சோதனை நடத்தும் தீவுகளுக்கே அருகே.. மலாக்கா ஜலசந்திக்கு அருகில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.. இந்தச் சம்பவம் நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இப்போது அமெரிக்கப் பகுதியில் நுழைந்த சீன பலூன் உளவு பார்ப்பதாகக் கூறி அதை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இந்தச் சூழலில் கடந்தாண்டு நடந்த சம்பவம் குறித்து இந்தியா மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்தியா ஆலோசனை

இந்தியா ஆலோசனை

இதுபோன்ற அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து எதிர்காலத்தில் விரைவாகப் பதிலளிக்கத் தேவையான நடவடிக்கைகளை இந்திய அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.. பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதி நவீன ஏவுகணையைப் பயன்படுத்தியது. சீனாவின் சில ஆயிரம் மதிப்பிலான பலூனுக்கு இந்த அதிநவீன ஏவுகணை தேவையா என்றும் சிலர் கேட்டனர். இதற்கிடையே இந்தியா அமெரிக்கா போல இல்லாமல், போர் விமானங்கள் அல்லது விமானங்களில் இணைக்கப்பட்ட கனரகத் துப்பாக்கிகள் மூலம் இதுபோன்ற சம்பவங்களுக்குப் பதிலடி தரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

திடீரென இந்த தீவு கூட்டம் அருகே நுழைந்த அந்த பலூன், அங்கு இருக்கும் பல இந்திய ரேடார் அமைப்புகளைத் தாண்டி சென்றதாக அதிகாரிகள் தெரிக்கிறார்கள். அந்த பலூன் யாருடையது அதைச் சுட்டு வீழ்த்தலாமா என்பதை முடிவு செய்யும் முன், அந்த பலூன் தென்மேற்கே கடலுக்குள் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதும் கூட அது எந்த நாட்டின் பலூனாக இருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் வெளிப்படையாக எதையும் கூற மறுக்கிறார்கள்.

பதில் இல்லை

பதில் இல்லை

இந்த விவகாரம் குறித்து இதுவரை இந்திய வெளியுறவு அமைச்சகம், கடற்படை மற்றும் விமானப்படை எதுவும் கூறவில்லை. இந்தியா இன்னும் சில மாதங்களில் ஜி20 கூட்டத்தை நடத்துகிறது. முதல்முறையாக இந்தக் கூட்டத்தை நடத்தும் நிலையில், எந்த நாடு உடனும் மோதல் போக்கை வைத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்தியா நினைக்கிறார்கள். இதன் காரணமாகவே இப்போது இந்த விஷயத்தைப் பொதுவெளியில் எடுத்து வரவும்.. வெளிப்படையாகக் குறிப்பிட்ட நாட்டை குற்றம் சொல்லவும் அவர்கள் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

அமெரிக்கா சீனா

அமெரிக்கா சீனா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் சில ஆண்டுகளாக மோசமான உறவு இருந்த நிலையில், அது மெல்லச் சீராகி வந்தது. கடந்த நவம்பரில் பைடன்- ஜி ஜின்பிங் சந்திப்பு நடந்தது. அதன் பின்னர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும் சீனா செல்லவிருந்தார் சரியாக அப்போது இந்த பலூன் அமெரிக்க வான்பகுதிக்குள் நுழையவே பரபரப்பு ஏற்பட்டது. இதை அமெரிக்கா சுட்டும் வீழ்த்தியது. அதன் பகுதிகளைச் சேகரித்து இப்போது அமெரிக்கா ஆய்வு செய்யும் நிலையில், இந்த பலூன் பல ஆண்டுகளாகச் சீனா நடத்தி வரும் கண்காணிப்பு திட்டத்தின் ஒரு பகுதி என்று அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+