இந்தியாவையே உலுக்கிய காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்.. 3 தமிழர்கள் படுகாயம்.. பெயர் விவரம் வெளியீடு

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவரவாத தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் காஷ்மீரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் தமிழர்களும் காயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது. இவர்கள் அனந்தநாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஹல்காம். இது காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த அற்புதமான மலைப்பகுதி சுற்றுலாத் தலம் ஆகும். அனந்தநாக் நகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லித்தர் பள்ளத்தாக்கில், லித்தர் ஆற்றங்கரையில்பஹல்காம் அமைந்துள்ளது. மிகவும் அருமையான இந்த சுற்றுலா தலம் இமயமலையில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

Names of 3 Tamils injured in Kashmir s Pahalgam terror attack released

ஆண்டுதோறும் ஜூலை -ஆகஸ்டு மாதங்களில் நடைபெறும் அமர்நாத் யாத்திரையின் போது, பஹல்காம் ஊருக்கு வெளியே பக்தர்கள் தற்காலிகத் தங்கும் பெரிய முகாம்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஏனெனில் அமர்நாத் யாத்திரை தொடங்குமிடமான சந்தன்வாரி முகாம், பகல்ஹாமிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் தான் இருக்கிறது.இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலருக்கும் பஹல்காமை மிகவும் பிடிக்கும்.

பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு மிகவும் அழகான காடுகளையும், பூங்காக்களையும் , மனதை மயக்கும் ஏரிகளும், மிகப்பெரிய அளவில் புல்வெளிகளையும் கொண்டுள்ளது. அதேநேரம் இங்கு நேரடியாக வாகனங்கள் மூலம் போக இயலாது. நடந்து போகலாம் அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே போக முடியும். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி இருந்த காரணத்தால். அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் இப்போதுவந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று பிற்பகலில் பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சராமரியாக சுட்டுள்ளனர்.இதில் 27 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.பலி எண்ணிக்கை உயருமோ என்ன அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் படுகாயம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு (83), பாலச்சந்திரா (57) ஆகிய 3 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் இவர்கள் அனந்தநாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.காஷ்மீரில் சுற்றுலா சென்ற இடத்தில் தாக்குதலில் காயம் அடைந்தவர்களின் விவரங்களை அறிய, தமிழக அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன்படி 011-24193300 மற்றும் 9289516712 என்ற எண்ணில் அழைத்து உதவி பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+