Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயிலுக்கு வரவே பயப்படும் மோடி! இந்துக்கள் மனம் புண்படாதா? ஆபரேஷன் சிந்தூர் விவாதம்! சு வெங்கடேசன் சரமாரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் (MP Su. Venkatesan about Operation Sindoor) பங்கேற்றுப் பேசினார். அப்போது பஹல்காம் தாக்குதல் நடந்தவுடன் காஷ்மீருக்குப் போகாமல் பிரதமர் மோடி பீகாரில் நடந்த பிரச்சாரத்திற்குப் போனதாக விமர்சித்தார். மேலும், நாடாளுமன்றம் ஜனநாயகத்தின் கோயில் எனச் சொல்லும் மோடி, கோயிலுக்கு வரவே அஞ்சுவது ஏன் என்றும் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து வருகிறது. இன்று காலை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இது குறித்துப் பேசியிருந்தார். இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களும் பேசி வருகிறார்கள்.

Nanrendra Modi falied to respond on Pahalgam Attack says Su Venkatesan in Lok Sabha

சு.வெங்கடேசன்

அதன்படி மதுரை எம்பி சு வெங்கடேசன் இந்த விவாதத்தில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருந்தார். அதில் அவர், "பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக நாடே ஒன்றுபட்டு நிற்கிறது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக அரசு நடத்திய எதிர்வினை தொடர்பாக விவாதத்தை அவையில் நடத்த நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம். கடந்த 2 மாதங்களாக எதிர்க்கட்சிகள் இதைப் பொறுப்புணர்ச்சி உடன் முயன்று வருகிறார்கள். 2 மாதங்களாகப் பொறுப்புணர்ச்சி என்றால் என்ன என்பது போல ஆளும்கட்சி நடந்து கொண்டு இருந்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் இந்த விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசியிருந்தார். பூரி தாக்குதல், பதன்கோட் தாக்குதல் ஆகியவற்றுக்குப் பிறகு இந்த அரசு என்ன சொன்னதோ அதையே தான் இப்போது திரும்பச் சொல்லி இருக்கிறார்கள். நீங்கள் அவ்வளவு பேசிய பிறகும் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் எப்படி நடந்தது!

யார் பொறுப்பு?

தாக்குதல் ஆரம்பித்த 1.30 மணி நேரத்திற்குப் பிறகு இது குறித்த தகவல் அரசுக்குத் தெரிய வந்துள்ளது. இது வெட்கக்கேடானது. மூன்று அடுக்கு பாதுகாப்பின் தோல்வி. ராணுவத்தின் தோல்வி, சிஆர்பிஎஃப்-இன் தோல்வி, காஷ்மீர் காவல் துறையின் தோல்வி! இதற்கு யார் பொறுப்பேற்பார்கள். அதிகாரிகளா? அமைச்சர்களா? இல்லை ஒரே நாடு ஒரே தலைவர் என நீங்கள் சொல்லும் பிரதமர் மோடி பொறுப்பேற்பாரா?

பீகார் பிரச்சாரத்திற்குப் போனார்

நீங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நடந்த தாக்குதல்களுக்கு எல்லாம் நேரு முதல் மன்மோகன் சிங் வரை அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்பீர்களே.. இப்போது நீங்கள் இதற்கு யாரை கை காட்டப் போகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறோம். இந்த தாக்குதல் நடந்த போது சவுதியில் இருந்த பிரதமர் மோடி, உடனடியாக இந்தியா புறப்பட்டார். நேரடியாக பஹல்காம் செல்வார் என்று நாடே எதிர்பார்த்தது. ஆனால், அவர் நேரடியாகப் பீகாரில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றார். உங்களுக்குத் தேர்தல் மட்டுமே முக்கியம் என்பதை இது காட்டுகிறது.

கோயிலுக்கு வரப் பயப்படும் மோடி

மேலும், சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தோம். ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம் என்று பிரதமர் மோடி சொன்னார். நாங்கள் கோயிலுக்கு வாங்க என்றே சொல்கிறோம். கோயிலுக்கு வரவே இந்தளவுக்குப் பயப்படும் பிரதமரைக் கொண்டிருப்பது சரியா? இங்கு வராமல் பீகாரில் தேர்தல் மேடைக்குப் போய் பேசுகிறார்.

அங்குப் போய் கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்துவோம் என்றார் மோடி! நாங்களும் அதை எதிர்பார்த்தோம். ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் கற்பனை செய்ய முடியாத தாக்குதலை நடத்தினார். இந்த பிரச்சினையில் அதிகம் தோல்வி அடைந்தது உள்துறையா இல்லை வெளியுறவுத் துறையா என்பதே எதிர்க்கட்சிகள் இப்போது விவாதித்து வருகிறோம்.

சர்வதேச அரங்கில் இந்தியா

சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பதை இந்தியாவால் தடுக்க முடியவில்லை. சர்வதேச நிதிய நிர்வாக குழுவில் 25 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில் ஒரு நாடு இந்தியாவுக்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை.

இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளுக்குச் சொல்ல அனைத்து கட்சி குழுக்களை அனுப்பினீர்கள். இதில் விசித்திரம் என்ன தெரியுமா! கடந்த காலங்களில் நீங்கள் யாரை எல்லாம் தேச துரோகிகள் எனச் சொன்னீர்களோ.. அந்த தேச துரோகிகளில் பலர் எதிர்க்கட்சி குழுவில் பங்கெடுத்தோம். ஏனென்றால் எங்களுக்கு முக்கியம் நாடு தான்!

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்த, சோழ பேரரசை நினைவுபடுத்திப் பேசியிருந்தார். சோழர்களின் போரை ஆபரேஷன் சிந்தூர் உடன் இணைத்துப் பேசியிருந்தார். கடல் கடந்து போர் நடத்தி வென்றவர்கள் சோழர்கள். அதற்குக் காரணம் என்ன தெரியுமா.. சோழர்கள் தங்கள் ஆரம்பித்த போரை தாங்களே முடித்தார்கள். பக்கத்து நாட்டு மன்னர்கள் அதை முடித்து வைக்கவில்லை. மோடி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை முடித்து வைத்தது நான் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 முறை சொல்லிவிட்டார்.

இந்துக்கள் மனம் புண்படாதா?

ராமர், கிருஷ்ணர் போலப் பிரதமர் மோடி இதை நடத்திக் காட்டியதாக பாஜக எம்பிக்கள் சொன்னார்கள். உங்கள் தோல்விகளை மறைக்க ராமர், கிருஷ்ணரைப் பயன்படுத்துகிறீர்கள். இது நியாயமா! இதனால் இந்துக்களின் மனம் புண்படாதா?" என்று அவர் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+