''கொரோனாவால் பாதிக்கப்பட்ட இம்ரான்கான் குணமடைய வாழ்த்துகிறேன்''.. மோடியின் பரந்த மனச பாருங்கய்யா!
டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இம்ரான்கான் தனிமைப்படுத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான்கான் உள்ளார். பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. பிரதமர் இம்ரான் கானுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த தகவலை பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இந்த நிலையில் இம்ரான்கான் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications