டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செமையான பட்ஜெட்ங்க...விவசாயிகள் வருமானம் உயர கவனம் செலுத்தியிருக்காங்க... பாராட்டி தள்ளிய மோடி!

Google Oneindia Tamil News

டெல்லி: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.என்று பிரதமர் நரேந்திர மோடி மத்திய பட்ஜெட்டை பாராட்டி பேசினார்.

இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. உள்கட்டமைப்பு அதிகரிக்க வழிவகை செய்துள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

நாட்டின் கடினமான சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

தேர்தலை மனதில் வைத்து திட்டம்

தேர்தலை மனதில் வைத்து திட்டம்

கொரோனா அச்சம் நாட்டை சூழ்ந்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் சட்டசபை தேர்தல்களை மனதில் வைத்து அந்த மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தொலைநோக்கு பார்வை இருக்கு

தொலைநோக்கு பார்வை இருக்கு

இந்த நிலையில் இந்த பட்ஜெட் நாட்டின் எதிர்கால காட்டுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- நாட்டின் கடினமான சூழ்நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்தியாவின் நம்பிக்கையை அதிகரிக்கும். பட்ஜெட்டில் தொலைநோக்கு பார்வை உள்ளது. இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள், உள்கட்டமைப்புக்கான புதிய பகுதிகள் பற்றிய ஒரு யோசனை உள்ளது. அனைத்து துறையின் மேம்பாட்டு பட்ஜெட் இதுவாகும்.

ஆரோக்கியம் அதிகரிக்கும்

ஆரோக்கியம் அதிகரிக்கும்

இந்த பட்ஜெட்டில் அரசு பொதுமக்கள் மீது சுமையை ஏற்படுத்தும் என்று பல வல்லுநர்கள் நினைத்திருந்தனர். நாங்கள் இந்தியாவுக்கு ஒரு சார்பு பட்ஜெட்டை வழங்கியுள்ளோம். இந்த பட்ஜெட்டின் உதவியுடன் செல்வமும் ஆரோக்கியமும் அதிகரிக்கும், இந்தியாவின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி. உள்கட்டமைப்பு அதிகரிக்க வழிவகை செய்துள்ளது. மேலும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்த பட்ஜெட்டில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் கிராமமும், விவசாயிகளும் இந்த பட்ஜெட்டின் இதயத்தில் இருப்பதைக் காட்டுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
Prime Minister Narendra Modi lauded the Union Budget for increasing the income of farmers
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X