தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை
டெல்லி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பிரதமர் மோடி மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் அவ்வப்போது ஆலோசனைகள் நடத்துகிறார்கள்.

தற்போதைய நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முதலில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லியில் அம்மாநில கெஜ்ரிவால் அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கைகளால், நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் நாள்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனையை துவக்கியுள்ளார். முதல்வரோடு, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, உத்திர பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநில முதல்வர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications