Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்ளோ ஈஸியில்லை.. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த என்னவெல்லாம் செய்யனும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் பரிந்துரைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். எனவே இது சாத்தியமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நாடு முழுவதும் சுமார் 62 அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டது. மேலும் 18 கட்சிகளிடம் நேரடி ஆலோசனையும் நடத்தியது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக 47 அரசியல் கட்சிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்திருந்தன. அவற்றில் 32 கட்சிகள் இந்த யோசனைக்கு ஆதரவாகவும், 15 கட்சிகள் எதிராகவும் கருத்து தெரிவித்ததாக ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

one nation one election congress

ஆதரிக்கும் கட்சிகள்: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்தும் பரிந்துரைக்கு பாஜக, தேசிய மக்கள் கட்சி, அதிமுக, ஏஜெஎஸ்யு (AJSU), அப்னா தளம், அசாம் கன பரிஷத், லோக் ஜனசக்தி கட்சி (R), தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி - நாகலாந்து (R), சிக்கிம் கிரந்திகாரி மோர்சா, மிசோ தேசிய முன்னணி, ஐக்கிய ஜனதா தளம், யுனைடட் பீப்பிள்ஸ் பார்ட்டி லிபரல் ஆஃப் அசாம், பிஜு ஜனதா தளம், சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அகாலி தளம் போன்றவை ஆதரவு தெரிவித்தன.

எதிர்க்கும் கட்சிகள்: அதேநேரம் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ஏஐயுடிஎஃப், திரிணமூல் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, நாகா மக்கள் முன்னணி (NPF), சமாஜ்வாதி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி இதனை கடுமையாக எதிர்க்கின்றன.

நிலைப்பாடு இல்லை: எனினும் பாரத் ராஷ்ட்ர சமிதி, ஐயுஎம்எல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா, கேரளா காங்கிரஸ் (M), தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற தங்கள் நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் இந்த முடிவுக்கு பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளே எதிர்ப்பு தெரிவிக்கவும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மெஜாரிட்டி: 2029 லோக்சபா தேர்தலின் போது, இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் ஆகும். அதேபோல் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி அவசியம் ஆகும்.

50 சதவீத மாநிலங்கள் ஆதரவு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி லோக்சபாவில் 293 இடங்களே பெற்றுள்ளன. பாஜக முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்கவில்லை.. மைனாரிட்டி ஆட்சியில் தான் உள்ளது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா போன்ற கட்சிகளின் ஆதரவுடன் தான் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சியில் இருக்கிறது. பல மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருப்பதால் 50 சதவீத மாநிலங்களில் ஒப்புதல் ஈஸியாக கிடைத்து விடும். ஆனால் நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பங்கு மெஜாரிட்டி பாஜக கூட்டணிக்கு இல்லை. இதற்கு இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் ஆதரிக்க வேண்டும். இந்த யோசனையை காங்கிரஸ் ஆதரித்தால் மட்டுமே பாஜகவால் எளிதாக நிறைவேற்ற முடியும்.

லோக்சபா மெஜாரிட்டி: மாறாக மற்ற மாநில கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றும் என்று நினைத்தாலும்.அது எளிதல்ல.. ஏனெனில் லோக்சபாவில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி என்பது 364 எம்பிக்கள் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் வெறும் 293 இடங்கள் மட்டுமே உள்ளது. எனவே இதற்கு இன்னமும் ஏராளமான எம்பிக்களின் ஆதரவு பாஜகவிற்கு தேவையாகும். சில கட்சிகளின் ஆதரவை பாஜக பெற்றாலும் 71 எம்பிக்களின் ஆதரவை பெறுவது என்பது எளிதான காரியம் இல்லை..

ஏனெனில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 99 இடங்களில் ஜெயித்துள்ளது. அதற்கு அடுத்தப்படியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி 37 இடங்களிலும், மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 27 இடங்களிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைவராக உள்ள திமுக 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களையும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் சிபிஎம், ஆர்.ஜே.டி. ஆகியவை தலா 4 இடங்களையும் மற்ற கட்சிகள் இணைந்து 19 இடங்களையும் பிடித்துள்ளன. மொத்தமாக அக்கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளன. இதில் பெரிய கட்சிகள் இல்லாமல் சிறிய கட்சிகள் 19 பேர் ஆதரித்தாலும், பெரிய கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, அல்லது திமுக போன்ற கட்சிகள் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றுவது சாத்தியமே இல்லை.

ராஜ்யசபா மெஜாரிட்டி: ராஜ்யசபாவில் 245 இடங்களில் பாஜக கூட்டணி 112, எதிர்க்கட்சிகள் 85. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம் 164 ராஜ்சபா எம்பிக்கள் ஆதரவு தேவை ஆகும்.. தற்போதைய நிலையில் பாஜகவிற்கு மெஜாரிட்டியே இல்லாத நிலை உள்ளது. இப்போது கூட்டணி கட்சிகள் பிற கட்சிகளின் தயவில் தான் மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்கிற நிலை உள்ளது. எனவே ராஜ்யசபாவில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி பாஜகவிற்கு சாத்தியமே இல்லை.. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பாஜக நிறைவேற்றுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாததாக உள்ளது. இந்த விவகாரத்தில் பாஜக பின்னடைவை சந்திக்கும் என்றே காங்கிரஸ் திட்டவட்டமாக கூறிவருகிறது. அதையும் மீறி சாதிக்க வேண்டும் என்றால், அதிசயமாக சில எதிர்க்கட்சிகள் மாற்றி வாக்களித்தால் தான் சாத்தியம் ஆகும். ஆனால் அதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+