மோடி சொன்னது அப்படியே நடக்குதா? "தென்னிந்தியாவில் விளாச போகும் பாஜக.." பிரதமர் அப்படி என்ன சொன்னார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தென்னிந்தியாவில் பிரதமர் மோடி கூறியதை போலவே லோக்சபா தேர்தலில் பாஜக முந்தைய தேர்தலைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்லும் என எக்சிட் போல் முடிவுகள் கூறியுள்ளன. அப்படி மோடி என்ன தான் கூறியிருந்தார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது நாட்டில் லோக்சபா தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், நேற்று இரவு முதலே எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி வருகிறது. பெரும்பாலான லோக்சபா தேர்தல் எக்சிட் போல் சர்வேக்கள் பாஜகவே ஆட்சியைத் தக்க வைக்கும் எனக் கூறியுள்ளன.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Exit Poll BJP Congress 2024

பாஜக: அதிலும் குறிப்பாக தென்னிந்தியா குறித்து வெளியாகியுள்ள எக்சிட் போல் முடிவுகள் தான் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக இருக்கிறது. பாஜக வடமாநிலங்களில் மட்டுமே வலுவாக இருப்பதாகவும் தென்னிந்தியாவில் பாஜக வலுவாக இல்லை என்றும் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதற்கு நேர்மாறாக எக்சிட் போல் முடிவுகள் உள்ளன.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் பாஜகவால் 30 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி (அதிமுக- 1), தெலுங்கானாவில் 3 சீட், கர்நாடகாவில் மட்டுமே அதிகபட்சமாக 26 தொகுதிகளில் பாஜக வென்றது. கேரளா, ஆந்திர மாநிலங்களில் பாஜக கூட்டணியால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.

தென்மாநிலங்கள்: ஆனால், ஐந்து ஆண்டுகளில் நிலைமை மாறிவிட்டது போலவே எக்சிட் போல் முடிவுகளைப் பார்த்தால் தெரிகிறது. தென் மாநிலங்களைக் குறிவைத்து பாஜக வேலை செய்து வரும் நிலையில், அதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது போலவே தெரிகிறது. டிவி 9 எக்ஸிட் போல் சர்வேயில் தெலுங்கானாவில் 7 இடங்கள், கர்நாடகாவில் 20 இடங்கள், தமிழகத்தில் 4 இடங்கள், ஆந்திராவில் 12 இடங்கள் கேரளாவில் ஒரு இடம் எனத் தென்னிந்தியாவில் பாஜக கூட்டணி 44 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது

சர்வே: டுடே சாணக்யா சர்வே படி தெலுங்கானாவில் 12 இடங்கள், கர்நாடகாவில் 24 இடங்கள், தமிழகத்தில் 4 இடங்கள், ஆந்திராவில் 22 இடங்கள் கேரளாவில் 4 இடங்கள் இடங்கள் என பாஜக கூட்டணி 66 இடங்களில் வெல்லும். அதேபோல ஏபிபி சி வோட்டர் சர்வே பாஜக கூட்டணி தென் மாநிலங்களில் 55 முதல் 64 இடங்களைப் பெறும் என்று கூறியுள்ளது.

நியூஸ்18 சர்வே படி பாஜக கூட்டணிக்கு 51 முதல் 64 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளன. Axis My India 59- 67 இடங்களையும் பெறும் எனக் கூறியுள்ளது. இந்த 5 மாநிலங்களில் மாநிலத்தில் எங்கும் பாஜக ஆட்சியில் இல்லாத போதிலும், 30 இடங்களை பாஜகவே தனியாகக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. எக்சிட் போல் முடிவுகள் அப்படியே நடந்தால் இவை பாஜகவுக்கு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

மோடி: இந்த எக்சிட் போல் முடிவுகள் மற்றவர்களுக்கு ஷாக்காக இருந்தாலும் பாஜக தலைவர்கள் தென் மாநிலங்களில் இந்த முறை நல்ல வெற்றியைப் பெறுவோம் என்றே தொடர்ந்து கூறி வந்துள்ளனர். குறிப்பாகப் பிரதமர் மோடி இந்த முறை பாஜக தென் மாநிலங்களில் பெரிய வெற்றியைப் பெறும் எனக் கூறியிருந்தார். தென் மாநிலங்கள் குறித்து அவர் அப்படி என்ன சொன்னார் என்பது குறித்துப் பார்க்கலாம்.

என்ன சொன்னார்: சில வாரங்களுக்கு முன்பு தென்னிந்தியாவில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்துப் பேசிய பிரதமர் மோடி, "தென்னிந்தியா மிகப் பெரிய ஆச்சரியத்தைத் தரப் போகிறது.. கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மாற்றத்தைக் காண்பீர்கள்.. அது பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு பெரிய சாதனை இருக்கும். குறிப்பாகத் தெலுங்கானாவில் என்டிஏ கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் க்ளீன் ஸ்வீப்பை வெற்றியை பாஜக பெறப் போவது உறுதி" என்றார்.

இந்த எக்சிட் போல் முடிவுகள் அப்படியே உண்மையாகும்பட்சத்தில் பிரதமர் மோடி சொன்னது அப்படியே நடந்து இருக்கும். தென்னிந்தியாவில் பாஜக தனது முத்திரையைப் பதிக்க முயன்று வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+