சனி வியாழன் சந்திக்கும் டிசம்பர் 21... வானத்தில் தோன்றும் பிரகாசம் - வைரக்கற்கள் விழுமா

சனி மற்றும் வியாழன் கிரகங்கள் வரும் 21ஆம் தேதி நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏசு கிறிஸ்து அவதாரம் நிகழ்ந்த போது வானத்தில் பிரகாசமான நட்சத்திரம் தோன்றியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அது 2 கோள்கள் நேர்கோட்டில் ஒன்றாக சந்தித்த போது ஏற்பட்ட பிரகாசமான ஒளியாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபோன்ற ஒரு நிகழ்வு இந்த கிறிஸ்துமஸ் மாதத்தில் நிகழப்போகிறது. வரும் 21ஆம் தேதியன்று சனி மற்றும் வியாழன் கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்து நட்சத்திரம் போன்ற பிரகாசமான தோற்றத்தை ஏற்படுத்த உள்ளன.

800 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிகழ்வு வானத்தில் ஒரு அற்புத நிகழ்வு நடக்கப்போகிறது. வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப் போகின்றன. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி இந்த கிரகங்களின் சேர்க்கை நட்சத்திர அடையாளத்தை உருவாக்குவதால் இதை கிறிஸ்துமஸ் முத்தம் என்று மேற்கத்திய நாட்டவர்கள் வர்ணிக்கின்றனர்.

வானவீதியில் சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களாக சூரியன், சந்திரன், பூமி, செவ்வாய், புதன், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் போன்ற கோள்கள் உள்ளன என்று படித்திருக்கிறோம். சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோள் வியாழன். இது நமது கண்களுக்கு அவ்வப்போது தென்படும்.

சூரியனை சுற்றும் கோள்கள்

சூரியனை சுற்றும் கோள்கள்

சூரியனில் இருந்து வியாழன் 5வது வரிசையிலும், சனி கிரகம் 6 வது வரிசையிலும் சுற்றி வருகின்றன. வியாழன் தனது நான்கு நிலவுகளுடன் இணைந்து சுற்றி வருகிறது. சனி கிரகமும் மிகப்பெரிய கோள்தான்.இது மெதுவாக நகரும் கிரகம். இதில் சனி கிரகம் மிகப்பெரிய வளையத்தை கொண்டிருக்கும். சனியும்,வியாழனும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் உள்ளன.

வியாழன் சனி தூரம்

வியாழன் சனி தூரம்

சூரியனுக்கும், பூமிக்கும் இடைப்பட்ட தூரம் 14 கோடியே 72 லட்சம் கிலோ மீட்டர். இதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தூரத்தை போல 5 மடங்கு தூரத்தில் வியாழன் கிரகமும், 7 மடங்கு தூரத்தில் சனி கிரகமும் இருக்கின்றன. சூரியனை சுற்றியுள்ள ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அப்போது ஒவ்வொரு கிரகமும் மற்ற கிரகத்துடன் நேர் கோட்டில் வருகின்றன. அவ்வாறு வரும்போது நாம் பூமியில் இருந்து பார்த்தால் அவை ஒரே நட்சத்திரம் போல தெரியும். அப்போது அவை மிகப்பிரகாசமாக தோன்றும். இதேபோன்ற ஒரு நிகழ்வு வருகிற 21ஆம் தேதி வானத்தில் நடக்கப்போகிறது.

ஒளிப்பிரவாகம் தோன்றும்

ஒளிப்பிரவாகம் தோன்றும்

வியாழன் கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி வருவதற்கு 11.9 ஆண்டுகள் ஆகின்றன. அதேபோல சனி கிரகம் சூரியனை சுற்றுவதற்கு 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இவ்வாறு சுற்றி வரும் வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கப் போகின்றன. அப்போது மிகப்பெரிய ஒளிப்பிரவாகம் வானத்தில் தோன்றக்கூடும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றாக தோன்றும் கோள்கள்

ஒன்றாக தோன்றும் கோள்கள்

வியாழனும் சனியும் வரும் 21ஆம் தேதி மாலை ஒரே நேர் கோட்டில் நமக்கு காட்சி அளிக்கின்றன. அப்போது வெறும் கண்ணால் அவற்றை பார்க்கலாம். இரண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரே நட்சத்திரம் போல நமக்கு தெரிவதால் அவை மிகப்பிரகாசமாக இருக்கும். நமது கண்ணுக்கு அவை ஒரே நட்சத்திரம் போல தெரிந்தாலும் இரு கிரகத்துக்கும் இடைப்பட்ட தூரம் 60 கோடி கிலோ மீட்டர் ஆகும். மிக தூரத்தில் இருந்து நாம் பார்ப்பதால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பது போல தென்படும்.

வியாழன் சனி சேர்க்கை

வியாழன் சனி சேர்க்கை

கடந்த 1226ஆம் ஆண்டு இரு கோள்களும் இதேபோல நேர்க்கோட்டில் வந்தன. அப்போது பூமியில் இருந்து நன்றாக பார்க்கும் வகையில் அவை அமைந்திருந்தன. இதனால் பிரகாசமான ஒளியை அவை உமிழ்ந்தது. மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு வரும் 21ஆம் தேதி நிகழப்போகிறது. சூரியனுக்கு கிழக்கே 30 டிகிரி கோணத்தில் அவை தென்படும். அன்றைய தினம் மாலை சூரியன் மறைந்து அரை மணிநேரத்தில் இந்த இரு கோள்களும் ஒன்றாக தெரிவதை காணலாம்.

தென்மேற்கு வானத்தில் தென்படும்

தென்மேற்கு வானத்தில் தென்படும்

தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.30 மணிக்கு தென்படும். 30 நிமிடத்தில் இருந்து 2 மணிநேரம் வரை நமது பார்வைக்கு நன்றாகத் தெரியும். அதன் பிறகு மறைந்துவிடும். இந்த காட்சி வானத்தில் தென்மேற்கே அரை கோளத்துக்கு கீழே அடிபகுதியில் தென்படும். நாளை 20 ஆம் தேதி சூரியன் மறைவிலிருந்து 22ஆம் தேதி சூரியன் உதயமாகும் வரை, இந்த நிகழ்வு நடக்கும் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது.

வியாழன் சனி சந்திபு

வியாழன் சனி சந்திபு

இப்போது இரு கோள்களும் ஒன்றாக இருப்பதை வெறும் கண்ணால் பார்த்தால் அப்போது நமக்கு சிறிதுகூட இடைவெளி தென்படாது. இரண்டுமே ஒரே நட்சத்திரம் என்பது போல இணைந்திருக்கும். இவற்றை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்தால் இரு கோள்களும் நூல் இழை அளவுக்கு இடைவெளி விட்டிருப்பதை பார்க்க முடியும். பூமியில் இருந்து வியாழன் அருகில் இருப்பதால் அது பிரகாசமாகவும், சனி தூரத்தில் இருப்பதால் சற்று மங்கலாகவும் இருக்கும்.

பார்க்கமுடியலையே

பார்க்கமுடியலையே

இதற்கு முன்பு 1623-ம் ஆண்டு இதேபோல இரு கிரகங்களும் நேர்க்கோட்டில் பிரகாசமாக காட்சி அளித்தது. அப்போது சனி கோளுக்கும், வியாழனுக்கும் இடையே 0.8 டிகிரி இடைவெளி இருந்தது. தற்போது 0.1 டிகிரி கோணத்தில் வானத்தில் தோன்றப்போகிறது. 1623ஆம் ஆண்டு அவை நெருங்கி இருந்தாலும் கூட பூமியில் இருந்து வேறு கோணத்தில் அவை இருந்ததால் அதை சரியாக பார்க்கமுடியவில்லை.

800 ஆண்டுகளுக்குப் பிறகு

800 ஆண்டுகளுக்குப் பிறகு

இந்த ஆண்டு இரு கிரகங்களையும் நாம் தெளிவாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நாம் இந்த உலகத்தில் இருக்கும் காலத்தில் இப்படி ஒரு நிகழ்வை பார்ப்பதற்கு காண கிடைத்துள்ளது தவறவிடாமல் வானத்தில் நிகழப்போகும் அதிசயத்தை கண்டு ரசியுங்கள்.

ஒளியை காணுங்கள்

ஒளியை காணுங்கள்

ஏசு கிறிஸ்து பிறந்த போது வானத்தில் பிரகாசமான நட்சத்திரம் தோன்றியதாக பைபிளில் கூறப்பட்டுள்ளது. அது 2 கோள்கள் நேர்கோட்டில் தோன்றியதால் ஏற்பட்ட பிரகாசமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது போன்ற கிரகங்கள் நேர் கோட்டில் வரும்போது ஈர்ப்பு விசை மாறி ஏராளமான விண்கற்கள் பூமியில் விழும். அப்போது வைர கற்களும் விழும் என்று நம்புகின்றனர். இப்போது சனியும், வியாழனும் ஒன்றாக சந்திக்கும் போது விண்கற்களும், வைர கற்களும் பூமியில் விழலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இவை எதுவுமே சரியான தகவல் இல்லை என்று விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+