சூப்பர் தகவல்:தமிழக வேலைவாய்ப்பின்மை 4.1%ல் இருந்து 3.2% ஆக குறைந்தது-ஹரியானாவில் தலைவிரித்தாடுகிறது
டெல்லி: தமிழகத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 4.1%-ல் இருந்து 3.2% ஆக குறைந்திருப்பதாக இந்திய பொருளாதார ஆய்வு நிறுவனம் Monitoring Indian Economy (CMIE) தெரிவித்துள்ளது.
Monitoring Indian Economy (CMIE) நிறுவனம் வெளியிட்டு தரவுகள் விவரம்: இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது மார்ச் மாதத்தில் 7.60% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 7.83% ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலேயே ஹரியானாவில்தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகமாக உள்ளது.

ஹரியானா மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 34.5% ஆக உள்ளது; இதற்கு அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 28.8% ஆக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மார்ச் மாதம் 4.1% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரலில் 3.2% ஆக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மையானது மார்ச் மாதத்தில் 8.28% ஆக இருந்தது. இது ஏப்ரல் மாதத்தில் 9.22% ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் ஊரகப் பகுதிகளில் மார்ச் மாதம் 7.29% ஆக இருந்த வேலைவாய்ப்பின்மை ஏப்ரலில் 7.19% ஆக குறைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 15.6% என உள்ளது.. அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவு.
மத்திய அரசு கடந்த மாதம் 28-ந் தேதி முக்கிய துறைகளின் வேலைவாய்ப்பு தொடர்பான காலாண்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்ட 9 துறைகளில் மொத்தம் 4,00,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகிய ஒன்பது முக்கிய துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்கள் பிரிவில் இந்த ஒன்பது துறைகள் மொத்த வேலைவாய்ப்பில் 85 சதவீதத்திற்கு பொறுப்பாகும்.
அதேபோல் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளில் உற்பத்தி துறை 39% உடன் முதல் இடத்திலும், கல்வி துறை 22% உடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
ஏறக்குறைய அனைத்து (99.4%) நிறுவனங்களும் வெவ்வேறு சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுமார் 23.55% நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு வேலையில் பயிற்சி அளித்தன என்றும் மத்திய அரசின் காலாண்டு ஆய்வு அறிக்கை குறிப்பிடுகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications