Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடி மேல் அடி.. சோனியா - ராகுலுக்கு நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்.. நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. அதேபோல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் அவர்களின் பெயர்களை சேர்த்துள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று டெல்லி நீதிமன்றம் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது அவர்கள் 2 பேருக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக சோனியா காந்தி, மகன் ராகுல் காந்தி ஆகியோர் உள்ளனர். இவர்கள் மீது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் சார்ந்த மோசடி வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.

national-herald-case-delhi-court-sends-notice-to-sonia-gandhi-and-rahul-gandhi

சிபிஐ முதலில் விசாரித்தது. அதன்பிறகு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கில் அமலாக்கத்துறை என்ட்ரி கொடுத்தது. மேலும் கடந்த 2021ம் ஆண்டில் இந்த வழக்கை விசாரிக்க டெல்லி பட்டியாலா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதாவது நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக ‛யங் இந்தியா' என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்கில் 76 சதவீதம் என்பது சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியிடம் தான் உள்ளது. சோனியா காந்தி 38 சதவீத பங்கையும், ராகுல் காந்தி 38 சதவீத பங்கையும் வைத்துள்ளனர்.

இதனால் பங்கு பரிமாற்றத்தில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை வெறும் 50 லட்சம் செலவில் மாற்றிவிட்டனர் என்று கூறினார். அதுமட்டுமின்றி டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியை தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பெரும் போராட்டத்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தான் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் குற்றப்பத்திரிகை என்பது தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது விசாரணை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் வழங்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பொதுவாக ஒரு வழக்கை எதிர்கொள்பவர்களுக்கு பிஎன்எஸ் சட்டப்பிரிவு 223ன் படி அதுபற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் தான் நீதிமன்றம் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதன்மூலம் அடுத்தக்கட்ட விசாரணையில் அவர்களிடம் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியும். இது சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் மே 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+