செப்டிக் டேங்க் சாவுகள்.. கலங்கிய கடலூர்! தலைமை செயலாளர்,டிஜிபிக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
டெல்லி: கடலூர் அருகே கழிவுநீர் தேக்க தொட்டியின் சாரத்தை பிரிக்கும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை அடுத்த கானூர் மாஞ்சோலை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 40 வயதான இவரது வீட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன் கழிவு நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த செப்டிக் டாங்கின் மேல்பகுதியில் கான்கிரீட் அமைப்பதற்காக, அந்த குழிக்குள் சாரம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி செப்டிக் டாங்கில் அமைக்கப்பட்டு இருந்த சாரத்தை பிரிக்கும் பணி நடைபெற்றது. இதற்காக கொத்தனார் பாலசந்தர் (வயது 32) மற்றும் சக்திவேல் (வயது 25) ஆகிய 2 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்த இருவருடன், வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியும் செப்டிக் டாங் குழிக்கு அருகே தோண்டப்பட்ட சிறிய துளை வழியாக ஒருவர் பின் ஒருவராக இறங்கினர்.
இதற்கிடையே செப்டிக் டாங்க் குழியில் இறங்கிய வீட்டு உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்டிட தொழிலாளர்கள் பாலசந்தர், சக்திவேல் ஆகியோர் நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் செப்டிக் டாங் குழி அருகே சென்று எட்டிப்பார்த்து உள்ளன்ர்.
அப்போது கிருஷ்ணமூர்த்தி, பாலசந்தர், சக்திவேல் ஆகிய மூன்று பேரும் செப்டிக் டாங் குழிக்குள் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்புகொண்டு அழைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மூன்று பேரையும் செப்டிக் டேங்கில் இருந்து வெளியே எடுத்தனர்.
அப்போதுதான் மூன்று பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தது தெரியவந்து உள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு, கடலூர் நகராட்சி ஆணையர் ஆகியோர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அது மனித உரிமை மீறல் என்று தெரிவித்து இருக்கும் தேசிய மனித ஆணையம், எந்த விதமான முன்னேற்பாடுகளும் இன்று இதுபோல் கழிவுநீர் தொட்டிகளில் இறங்குவதை தடுக்க தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் தர உத்தரவிட்டு உள்ளது.
அதேபோல் இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் முதல் தகவல் அறிக்கையின் விபரங்களையும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் எனவும், நகராட்சி நிர்வாகத்தில் அலட்சியத்தால் இது நடந்ததா என்று வினவியுள்ளது. அதேபோல் இது தொடர்பாக அரசு ஏற்படுத்தி இருக்கும் விழிப்புணர்வுகள் தொடர்பாகவும், உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்தும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications