அரசியல் கட்சிகளுக்கு கோடிகளை கொட்டி கொடுத்த "நவ யுகா.." உத்தரகாண்ட் சுரங்க பணியை மேற்கொண்ட நிறுவனம்
டெல்லி: தேர்தல் பத்திரங்களை இன்று மாலை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. இதில், உத்தரகாண்ட்டில் சுரங்க கட்டுமான பணியை மேற்கொண்டு வந்த நவ யுகா நிறுவனம், கடந்த 2020 ஆம் அண்டில் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் கூறியதை அடுத்து, தேர்தல் பத்திர விவரங்களை கடந்த நேற்று முன் தினம் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி வழங்கியது. இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது. அதாவது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது.

தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக இடம் பெற்றுள்ளன. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து எந்தெந்த கட்சிகள் ரொக்கமாக மாற்றின என்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு பத்திரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த கட்சிகள் எவ்வளவு தொகையை வாங்கியிருக்கின்றன போன்ற விவரங்களை வெளியிட்டுள்ளது.
நவ யுகா நிறுவனம்: இந்த நிலையில், உத்தரகாண்ட்டில் சுரங்க கட்டுமான பணியை மேற்கொண்டு வந்த நவ யுகா நிறுவனம், கடந்த 2020 ஆம் அண்டில் மட்டும் கிட்டட்த்தட்ட 30 கோடிக்கும் மேலாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை அளித்துள்ளது. இந்த நிறுவனம் தான் உத்தரகாண்டில் சுரங்க கட்டுமான பணிகளை மேற்கொண்டது. இந்த சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத்தில் சிக்கிய சுமார் 40 தொழிலாளர்கள் 17 நாட்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?: கடந்த 2017 ஆம் பிப்ரவரி மாதம் இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் என்பது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்தாமல், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க அனுமதிக்கும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் விதிகளின்படி, இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நாட்டில் இணைக்கப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த நிறுவனமும் தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். இந்த பத்திரங்கள் ₹ 1,000 முதல் ₹ 1 கோடி வரையிலான பல்வேறு மதிப்புகளில் கிடைக்கின்றன. மேலும் பாரத ஸ்டேட் வங்கியின் சில கிளைகளில் பெறலாம். இந்த நன்கொடைகளுக்கு வட்டியும் இல்லை. இந்த பத்திரங்களை பெயரை வெளிப்படுத்தாமல் எந்த கட்சிக்கும் கொடுக்கலாம்.
நிறுவனங்கள் பெயர்களை வெளியிட்டது: இதன் மூலம் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகளை அரசியல் கட்சிகள் பெற்றால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என மாற்றிவிட்டது. இந்த நிலையில்தான் தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கில், நாடு முழுக்க தேர்தல் பத்திரங்களை உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ல் வெளியிட உச்ச நீதிமன்றம் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வழங்கியது.
இந்த நிலையில் இன்று மாலை அந்த பத்திரங்களை தேர்தல் ஆணையம் பொதுவில் வெளியிட்டது. அதாவது தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் இந்த விவரத்தை வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் முக்கியமான சலுகை ஒன்றை உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதன்படி தேர்தல் பத்திரங்களை பயன்படுத்தி நிதி கொடுத்த நிறுவனங்கள் பெயர்களை வெளியிட வேண்டும்.
அவர்கள் கொடுத்த பணத்தை வெளியிட வேண்டும். அதேபோல் எந்த கட்சி பணம் பெற்றது என்றும் வெளியிட வேண்டும். ஆனால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனத்திடம் இருந்து பணம் சென்றது என்பதை காட்ட வேண்டியது அவசியம் இல்லை என்று சலுகையை கொடுத்தது. இதன் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications