ஜனாதிபதி தேர்தல்:பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் -அதிமுக பங்கேற்பு!
டெல்லி: நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிஷாவை சேர்ந்த பழங்குடி இனத் தலைவர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணி வேட்பாளரான திரெளபதி முர்மு, இன்று நாடாளுமன்ற ராஜ்யசபா செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பொதுவாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை 50 எம்.பிக்கள் முன்மொழிய வேண்டும். பிரதமர் மோடி, திரெளபதி முர்முவின் வேட்புமனுவை முதலில் முன்மொழிந்தார். பின்னர் மத்திய அமைச்சர்கள் முன்மொழிந்தனர். முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை நேற்று திரெளபதி முர்மு நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திரெளபதி முர்பு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்க வேண்டும் என்று அதிமுகவின் இரட்டை தலைவர்களான ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு பாஜக நேற்று நேரில் முறைப்படி அழைப்பு விடுத்தது. இதையடுத்து ஓபிஎஸ், ஈபிஎஸ் கோஷ்டிகள் டெல்லி சென்று திரெளபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் நிகழ்வில் பங்கேற்றன.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications