ஒடிசாவில் அடித்து தூக்கும் பாஜக.. நவீன் பட்நாயக்கிற்கு இடி.. என்டிடிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
டெல்லி: லோக்சபா தேர்தல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஒடிசாவில் பாஜகவுக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என்று என்டிடிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஒடிசாவில் 21 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் பிஜு ஜனதா தளமும் பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. சிபிஎம் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது. இதன் காரணமாக ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவியது. அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டன.

ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தள கட்சியில் முக்கிய தலைவராக இருப்பவர் வி.கே.பாண்டியன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர். இவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்தாண்டு நவம்பரில் பிஜு ஜனதா தள கட்சியில் இணைந்தார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக அரசியலில் பயணித்து வருகிறார். இவரைக் குறிவைத்தே ஒடிசாவில் பாஜக பிரச்சாரம் செய்து வந்தது. ஒடிசா மாநிலத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆள வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பாஜக அங்குப் பிரச்சாரம் செய்து வருகிறது.
அதாவது நவீன் பட்நாயக்கிற்கு பிறகு பிஜு ஜனதா தள கட்சியின் தலைவராக விகே பாண்டியன் தேர்வு செய்யப்படுவார் என்பதே அவர்கள் பிரச்சாரமாக இருந்தது. இதனால், ஒடிசா தேர்தல் களம் தமிழகத்திலும் கவனம் பெற்றது. இந்த நிலையில் ஒடிசாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
என்டிடிவி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில், ஒடிசாவில் பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் 3 முதல் 8 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
ஒடிசா லோக்சபா தொகுதிகள் - 21 இடங்கள்
பாஜக - 15 இடங்கள்
பிஜூ ஜனதா தளம் - 3 - 8 இடங்கள்
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications