பாரத் ஜோடா யாத்திரையால் திருப்பம்.. ராகுல் காந்தியை அதிகம் விரும்பும் மக்கள்.. என்டிடிவி சர்வே
டெல்லி: பாரத் ஜோடோ யாத்திரைக்கு பிறகு காங்கிரஸின் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்ட மக்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மறையாமல் உள்ளது என்று என்டிடிவி கூறியுள்ளது. சிஎஸ்டிஎஸ் உடன் இணைந்து நடத்திய சிறப்பு சர்வே முடிவுகளை என்டிடிவி வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை பார்க்கலாம்.
பிரதமர் மோடி இந்த மாதம் ஆட்சிக்கு வந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரப்போகிறது. அதற்கு முன்பு மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற போகிறத. இந்நிலையில் பொதுமக்களின் மனநிலையை மதிப்பிட இந்த சர்வே மூலம் என்டிடிவி முயற்சித்தது.

கர்நாடக தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸிடம் தோல்வியடைந்ததை அடுத்து, மே 10 முதல் 19 வரை 19 மாநிலங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது. லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் 71 தொகுதிகளில் 7,202 பேரிடம் கணக்கெடுப்பை மேற்கொண்டது.
என்டிடிவியின் சர்வேயில் பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் இன்று தேர்தல் நடந்தால், நரேந்திர மோடி தான் பிரதமராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதேநேரம் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று 27 சதவீதம் பேர் ஆதரித்துள்ளனர்.
பிரதமர் மோடியை அவரது பேச்சாற்றலால் 25 சதவீதம் பேரால்வ மிகவும் விரும்பப்படுகிறார். பதிலளித்தவர்களில் 20% பேர் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் பிரதமராக அவரை விரும்புவதாகவும், 13% பேர் அவர் கடின உழைப்பாளி என்பதால் பிரதமரை விரும்புவதாகவும் கூறியுள்ளனர். சுமார் 11% பேர் அவருடைய கொள்கைகளைப் பாராட்டியுள்ளனர்.

2024ல் பிரதமர் மோடிக்கு யார் சவாலாக இருப்பார்கள் என்று சர்வேயில் பதிலளித்தவர்களிடம் கேட்கப்பட்டது. 34% பேர் ராகுல் காந்தி என்றும், 11% பேர் அரவிந்த் கெஜ்ரிவால் என்றும் கூறியுள்ளனர். அகிலேஷ் யாதவ் (5%) மற்றும் மம்தா பானர்ஜி (4%) என்றும் சிலர் கூறினர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 9 சதவீதம் பேர் பிரதமர் மோடிக்கு சவாலாக யாருமே இல்லை என்றுகூறினர்.
ராகுல் காந்தியைப் பொறுத்தவரை, 26% பேர் "எப்போதும் அவரை விரும்புவதாக" கூறியுள்ளனர், 15% பேர் பாரத் ஜோடோ யாத்ராவிற்குப் பிறகு விரும்புவதாக கூறினர். 16% பேர் ராகுலை பிடிக்கவில்லை என்றும், 27 சதவிகிதம் பேர் நடுநிலை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சர்வேயில், பாஜகவின் வாக்கு சதவீதம் 2019 (37%) இலிருந்து 2023 (39%) ஆக அதிகரித்துள்ளது. காங்கிரஸின் - 2019 இல் 19% முதல் 2023 இல் 29% ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications