நீட் தேர்வு முறையில் மாற்றம்.. சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை அறிமுகம்!
டெல்லி: நீட் தேர்வு முறையில் வினாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு சாய்ஸ் அடிப்படையில் பதில் அளிக்கும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகமாகியுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்வது நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆகும். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம்.
வழக்கமாக நீட் தேர்வில் 180 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும். தற்போது இந்த ஆண்டு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக சாய்ஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு பாடத்திலும் ஏ பிரிவில் 35, பி பிரிவில் 15 என 4 பாடங்களுக்கு தலா 50 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம் பெறவுள்ளன. இவற்றில் 180 கேள்விகளுக்கு மட்டும் பதில் அளித்தால் போதுமானது.
விடைத்தாளில் தவறான விடை அளித்தால் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். பதில் அளிக்காத கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கிடையாது என்ற பழைய நடைமுறையே தொடரும்.
நீட் தேர்வு தமிழ், ஹிந்தி, உருது, ஆங்கிலம், அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா என 11 மொழிகளில் தேர்வு நடந்தது. தற்போது மலையாளம், பஞ்சாபி மொழிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு இனி 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications