செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு.. செப்டம்பர் 1-6 வரை ஜேஇஇ தேர்வு.. தேசிய தேர்வு ஆணையம் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரையும் நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு இடையே நீட் தேர்வை நடத்த கூடாது என்று கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டது. மாணவர்கள் உயிரோடு அரசு விளையாட கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Neet exam will be held on September 13, JEE on Sep 1-6

இதையடுத்து தற்போது நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நீட் தேர்வுகள் செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ தேர்வுகள் செப்டம்பர் 1-6 வரை நடக்கும் என்று தேசிய தேர்வு ஆணையம் (என்டிஏ) அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படியே தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று என்டிஏ அறிவித்துள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஏற்கனவே அட்மீட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. நீட் தேர்விற்கு விரைவில் அட்மீட் கார்டு வழங்கப்படும்.

99% மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்பட்ட தேர்வு மையங்கள் தரப்படும். ஜேஇஇ தேர்வு மையங்களின் எண்ணிக்கை 570ல் இருந்து 660 ஆகி உயர்த்தப்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையங்கள் 2546ல் இருந்து 3843 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.8.58 லட்சம் பேர் இந்த முறை ஜேஇஇ தேர்வு எழுதுகிறார்கள்.15.97 லட்சம் பேர் இந்த முறை நீட் தேர்வு எழுதுகிறார்கள், என்று தேசிய தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+