லீக் ஆன வினாத்தாள்! ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு.. NTA-ஐ கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு
டெல்லி: கடந்த 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் லீக் ஆகியிருப்பதாக தெரிய வந்ததால், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நீட் தேர்வு கொண்டுவரப்பட்டதிலிருந்து பெரிய தலைவலியாகத்தான் இருக்கிறது. 12ம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுதிதான் மாணவர்கள் தேர்ச்சியடைகிறார்கள். இதுவே பெரிய சவாலான விஷயம். ஆனால், மருத்துவம் பயில இந்த தகுதி மட்டும் போதாது, நீட் எனும் தேர்வையும் எழுத வேண்டும் என்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பது, பேப்பரை திருத்துவது போன்றவற்றை செய்ய தேசிய தேர்வு முகமை என்கிற அமைப்பையும் மத்திய அரசு உருவாக்கியிருந்தது.

இங்குதான் பிரச்சனையே! இந்த அமைப்பு கடந்த காலங்களில் பயங்கரமாக சொதப்பி வந்திருக்கிறது. அதிலும் இந்த ஆண்டு வினாத்தாள் லீக் ஆனது எல்லாம் சொதப்பலின் உச்சம்.
பல லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வு, வினாத்தாள் கசிந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. வாட்ஸ்அப், டெலிகிராமில் ஷேராகியிருந்த உத்தேச வினாத்தாளிலிருந்து சுமார் 100க்கும் அதிகமான கேள்விகள் நீட் தேர்வில் இடம் பெற்றிருந்தன. இப்படியா கேர்லஸாக இருப்பது? என்று தேர்வு முகமை மீது கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்வு முகமை அமைப்பே தேவையில்லை. அதை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு ஒரு அமைப்பை ஏற்படுத்துங்கள். அல்லது இந்த அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications