Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதுநிலை நீட் தேர்விலும் சர்ச்சை.. 1,000 கிமீ தொலைவில் ஒதுக்கப்பட்ட தேர்வு மையம்? மாணவர்கள் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மருத்துவ மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் பிஜி தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுகளுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருப்பதாக தேர்வர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். இதனால், தேர்வு மையங்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான், மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. கருணை மதிப்பெண், நீட் வினாத்தாள் கசிவு என பல சர்ச்சைகள் வெடித்தன.

NEET PG Exam Medical Delhi

நீட் பிஜி தேர்வு: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்தது. எனினும், தேசிய தேர்வு முகமைக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியது. இளநிலை மருத்துவ படிப்புகளை போலவே முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலை நீட் என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

11 ஆம் தேதி தேர்வு: அந்த வகையில் 2024-25- ஆம் கல்வியாண்டில் அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கு நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் தேர்வர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழகத்தை பொறுத்தவரையில் சுமார் 25 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.

500 முதல் 1000 கி.மீ: கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதி இந்த தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வு வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 185 மையங்களில் நடைபெற உள்ளது. முன்னதாக 259 மையங்களாக இருந்ததை தற்போது 185 மையங்களாக தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது. இதனால், தேர்வர்களுக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

அதாவது, விருப்ப மையங்களை கேட்டு இருந்த தேர்வர்கள் பலருக்கும் சுமார் 500 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையிலான தொலைவில் தேர்வு மையங்களை தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் ஒதுக்கீடு செய்து இருப்பதாக தேர்வர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். எடுத்துக்காட்டாக

தேர்வர்கள் ஆதங்கம்: தமிழ்நாட்டை சேர்ந்த தேர்வர்களுக்கு இங்குள்ள 17 மையங்களில், மையம் ஒதுக்காமல், பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவுக்கு ஒதுக்கியிருப்பதாக தேர்வர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. தொலை தூரங்களில் ஒதுக்கப்பட்டு இருப்பதால், பயணச் செலவு, அலைச்சல் அதிகரித்து இருப்பதோடு, மன உளைச்சலுக்குள்ளாகியிருப்பதாகவும் தேர்வர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

எந்த வகையில் நியாயம்: இதேபோல் பிற மாநில தேர்வர்களுக்கும் மையங்களும் தொலைதூரத்தில் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், தேர்வர்களின் நிலையை கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒதுக்கீடு செய்வது எந்த வகையில் நியாயம் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்களை மாநிலத்திற்குள்ளேயே ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைகப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+