நீட் பிஜி தேர்வு எப்போது? வினாத்தாள் கசிவை தடுக்க NTA கையில் எடுக்கும் அஸ்திரம்.. கசிந்த பரபர தகவல்
டெல்லி: கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நீட் பிஜி தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு மாதத்தில் இந்த தேர்வு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக நீட் பிஜி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க புதிய பிளான் ஒன்றை தேசிய தேர்வு முகமை கையில் எடுத்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படுவது போலவே முது நிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது, இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக நீட் என்னும் தகுதித்தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை நீட் தேர்வு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும்.

நீட் பிஜி தேர்வு ரத்து: நீட்டில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோல நீட் பிஜி தேர்வு மூலமாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். அந்த வகையில் நீட் பிஜி தேர்வு கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஹால் டிக்கெட்டும் வெளியாகி இருந்தது. ஆனால் நீட் இளநிலை தேர்வில் நடந்த சர்ச்சைகளால் கடைசி நேரத்தில் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.
நீட் சர்ச்சை எதிரொலி: நீட் தேர்வில் தொடர் சர்ச்சைகள் எழுந்தன. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் என அடுத்தடுத்து புகார்கள் கிளம்பிய நிலையில், முதுகலை படிப்புகளுக்காக நடத்தப்படும் நீட் பிஜி தேர்வை தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. தேர்வுக்கு முந்தைய நாள் இரவு ரத்து அறிவிப்பு வெளியானதால் மருத்துவ மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நீட் பிஜி தேர்வு எப்போது?: இந்த நிலையில், ரத்து செய்யப்பட்ட நீர் பிஜி தேர்வு எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு மாதமே நீட் பிஜி தேர்வை நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாம். அதேபோல், வினாத்தாள் கசிவு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே வினாத்தாள் தயார் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தொடர் சர்ச்சை: மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வினால் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்து போகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications