ஒரே நேரத்தில் நீட் தளத்தில் குவிந்த மாணவர்கள்.. நீட் இணையதளம் தளம் முடங்கியது
டெல்லி: ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் நீட் தேர்வு இணையதளம் சற்று நேரம் முடங்கியது. இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வு தான் மூலம் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் இன்று மாலை 5 மணி முதல் neet.nta.nic.in என்ற தளத்திலிருந்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு நடைபெறும் நகரங்கள் 155இல் இருந்து 198ஆக அதிகரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணிக்கு நீட் தேர்வு விண்ணப்பம் ஆன்லைனில் தொடங்கியது. இருப்பினும், ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான மாணவர்கள் விண்ணப்பிக்க முயன்றதால் சற்று நேரம் neet.nta.nic.in தளம் முடங்கியது.
இருப்பினும், சில நிமிடங்களிலேயே அந்த தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதையடுத்து மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய தமிழ்நாடு அரசு அமைத்திருந்த ஏகே ராஜன் தலைமையிலான குழு நாளை அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications