எத்தனால் பெட்ரோல் யூஸ் செய்தால்.. இன்சூரன்ஸ் கூட கிடைக்காதாம்! புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்!
டெல்லி: நமது நாட்டில் இப்போது பெட்ரோல் உடன் எத்தனால் ( E20 Fuel) கலந்தே விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த E20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனங்களில் பழுது ஏற்படுவதாகப் பலரும் அச்சம் தெரிவிக்கிறார்கள். குறிப்பாக இதனால் எஞ்சின் பெயிலியர் ஏற்படும்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இன்சூரன்ஸ் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் உடன் எத்தனால் கலந்து விற்கும் திட்டம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. எத்தனால் அளவு மெல்ல அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது பெட்ரோல் உடன் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. அதாவது நாம் வாங்கும் பெட்ரோலில் 80% பெட்ரோலும் 20% எத்தனாலும் இருக்கிறது.

எத்தனால் பெட்ரோல்
கார்பன் வெளியேற்றம் காரணமாகப் பருவநிலை மாற்றம் ஏற்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த எத்தனால் கலந்து விற்க முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் 20% எத்தனால் கலக்கப்படுவதால் எஞ்சின் பாதிப்பு ஏற்படுவதாகவும் மைலேஜ் குறைவதாகவும் சிலர் சொல்கிறார்கள். இதனால் எத்தனால் கலந்த பெட்ரோல் குறித்து இணையத்தில் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.
குறிப்பாக இந்த E20 பெட்ரோலால் எஞ்சின் பாதிப்பு ஏற்படலாம் என்றும் இதனால் இன்சூரன்ஸ் கூட கவர் ஆகாமல் போகலாம் என்றும் சிலர் அச்சம் தெரிவித்துள்ளனர். E20 எரிபொருளைப் பயன்படுத்தும் போது வாகனங்களில் எஞ்சின் பிரச்சினை எதாவது ஏற்பட்டால் எஞ்சின் நிறுவனங்கள் அந்த கிள்மை நிராகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவியது.
விவாதம்
நமது நாட்டில் 2023க்கு பிறகு தயார் செய்யப்பட்ட வாகனங்கள் மட்டுமே எத்தனால் கலப்பு பெட்ரோலை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் 2023-ஆம் ஆண்டுக்கு முன் வாகனங்களை வாங்கியவர்கள், எத்தனால்-பெட்ரோல் கலப்பு காரணமாகக் கடும் சிக்கலில் உள்ளதாக நெட்டிசன்கள் சிலர் கூறி வருகிறார்கள். இந்தச் சூழலில் பிரபல இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று ட்விட்டரில் இது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் பேசுபொருள் ஆகியுள்ளது.
இன்சூரன்ஸ் இல்லை
அதாவது தவறான எரிபொருள் பயன்பாட்டால் என்ஜின் பழுது ஏற்பட்டால் அது இன்சூரன்ஸில் கவர் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கொள்கை விதிமுறைகளின்படி இது வாடிக்கையாளரின் அலட்சியமாகவே கருதப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. E20 பெட்ரோல் என்பதை அந்த நிறுவனம் தனது பதிவில் கூறவில்லை. இருப்பினும், E20 பெட்ரோல் காரணமாக ஏற்படும் பாதிப்பு தொடர்பாக நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலாகவே இதை அந்த நிறுவனம் பதிவிட்டிருந்தது.
அதில் மேலும், "வாடிக்கையாளர் இன்சூரன்ஸ் எடுக்கும்போது ரோட் சைட் அசிஸ்டன்ஸ் எடுத்திருந்தால்.. அவர்கள் எந்தவொரு எரிபொருள் பயன்படுத்தியிருந்தாலும் ஆதரவளிப்போம். இருப்பினும் எரிபொருள் பயன்பாடு காரணமாக ஏற்படும் என்ஜின் பழுது "விபத்து" ஆக கருதப்படாது என்றும், எனவே அது நிலையான காப்பீட்டின் கீழ் வராது" என்று தெரிவித்துள்ளது.
நெட்டிசன்கள் புலம்பல்
இது விளக்கம் தெரிந்தாலும் இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. E20 பெட்ரோல் பயன்பாடு காரணமாக ஒருவேளை இஞ்சின் பெயிலியர் ஏற்பட்டால் அது இன்சூரன்ஸில் கவர் ஆகுமா என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. இது தொடர்பாக அரசோ அல்லது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தெளிவான விளக்கத்தைத் தர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் கிரீன் சிக்னல்! கச்சா எண்ணெய் விலை சரிவு.. இந்தியாவில் எதிரொலிக்குமா? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications