அம்மாடி! அப்படியே மனிதனை போல எழுந்து நிற்கும் செம பெரிய ராஜநாகம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் க்ளோஸ் தான்
ராஜநாகம் ஒன்றின் வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
டெல்லி: பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதிலும் ராஜநாகம் குறித்து தனியாகச் சொல்ல வேண்டியது இல்லை. இதனிடையே ராஜநாகம் மனிதனைப் போல எழுந்து நின்று பார்க்கும் வீடியோ ஒன்றை வனத்துறை அதிகாரி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
உலகிலேயே தென் துருவத்தில் இருக்கும் அண்டார்டிக்கா தவிர அனைத்து கண்டங்களிலும் இருக்கும் உயிரினங்களில் ஒன்று பாம்புகள். இதுவரை உலகெங்கும் 3000க்கும் மேற்பட்ட பாம்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலகெங்கும் காணப்படும் பாம்புகளில் பல வகைகள் உள்ளன. விஷம் இருக்கும் பாம்புகள், விஷமற்ற பாம்புகள், தண்ணீர் பாம்பு, மலைப்பாம்பு என்று பல விதமான பாம்புகள் உலகெங்கும் இருக்கின்றனர்.

பாம்பு
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்ற பேச்சு உள்ளது. அந்தளவுக்குக் கம்பீரம் நிறைந்ததாகவும் அச்சுறுத்துவதாகவுமே பாம்புகள் இருந்து வருகிறது. நாகப்பாம்புகள் அதிக விஷம் கொண்டதாகப் பார்க்கப்படுகிறது. அதிலும் நாகப்பாம்புகள் வகைகளில் கடுமையான விஷம் கொண்டது ராஜநாக வகையாகும் இதனை ஆங்கிலத்தில் "கிங் கோப்ரா" என்று அழைக்கப்படுகிறது. ராஜநாகம் கொத்த வேண்டாம் சும்மா நம்மைப் பார்த்துச் சீறினாலேயே யாராக இருந்தாளும் மிரண்டுவிடுவார்கள்.

ராஜநாகம்
அந்தளவுக்கு மிரட்டலான தன்மை கொண்டதே ராஜநாகம். இந்த ராஜநாகம் பெரும்பாலும் மனிதர்களைத் தவிர்த்தே செல்லும். அப்படியே மனிதர்களின் அச்சுறுத்தலால் தற்காத்துக் கொள்ளக் கொத்தினாலும் விஷத்தைக் கக்காது. இருந்தாலும் ராஜநாகம் கொத்திவிட்டதே என்ற அச்சத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவங்களும் உள்ளன. அந்தளவுக்கு மிரட்டும் தன்மை கொண்டது தான் ராஜநாகம். பொதுவா இவை அதிகம் மழை பெய்யும் இடங்கள், அடர்ந்த புதர்செடிகளைக் கொண்ட காடுகள், சதுப்புநிலங்களில் அதிகம் இருக்கும்.
|
பரபர வீடியோ
இந்தியாவிலும் பல காட்டுப் பகுதிகளில் நம்மால் ராஜநாகத்தைப் பார்க்க முடியும். உலகத்திலேயே மிகவும் நீளமான விஷப்பாம்பும் இதுதான். மூன்று அடியிலிருந்து சுமார் 15 அடிக்கும் மேல் வளரக்கூடியது. இதற்கிடையே இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா சமீபத்தில் ராஜநாகம் தனது உடலில் பெரும்பகுதியைத் தூக்கி நிற்பது போன்ற அசத்தலான வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அவர் பதிவிட்ட இந்த வீடியோ உடனடியாக இணையத்தில் டிரெண்டிங் ஆனது.

மனிதரைப் போல எழுந்து நின்றது
அதில் பெரிய ராஜநாகம் ஒன்று தனது உடலில் பெரும்பகுதியை மேலே தூக்கி நிற்பது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த சுசாந்தா நந்தா, "ராஜநாகத்தால் உண்மையில் எந்தளவுக்கு எழுந்து நிற்க முடிகிறது என்பதைப் பார்க்கலாம்.. முழுமையாக வளர்ந்த ஆள் அளவுக்கு அதனால் எழுந்து நிற்க முடிகிறது. ராஜநாகத்தால் அதன் உடலில் மூன்றில் ஒரு பகுதியைத் தரையில் இருந்து உயர்த்தி எழுந்து நிற்க முடியும்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள்
இந்த வீடியோவை இதுவரை சுமார் 5.8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்து மிரளும் நெட்டிசன்கள் பல வித கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவர், "'இந்த ராட்சத ராஜநாகம் மனிதனைப் போல உயரமாக நிற்பதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது. ஒருவரை அச்சுறுத்த இதுவே போதும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இந்த பாம்பு கடிக்கவெல்லாம் வேண்டாம்.. இப்படி எழுந்து பார்த்தாலே அவ்வளவு தான் என்று பதிவிட்டுள்ளனர்.

கிங் கோப்ரா
கிங் கோப்ரா தான் உலகின் மிக அதிக விஷத்தைக் கொண்ட பாம்புகளில் ஒன்றாகும்.. ராஜநாகம் 10 முதல் 12 அடி நீளமும் 9 கிலோ) வரை எடையும் இருக்கும். ராஜநாகம் ஒரே கடியில் 20 பேர் வரை கொல்லும் விஷத்தைக் கொண்டிருக்கிறது. இவை பெரும்பாலும் மற்ற வகை பாம்புகளையே உணவாகச் சாப்பிடும். சில சமயங்களில் எலி போன்ற சிறு விலங்குகளையும் உணவாகச் சாப்பிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications