"பிரதமர் மோடி விரைவில் கொல்லப்படுவார்.." பஞ்சாப் விவசாயி பகிரங்க மிரட்டல்! தீயாக பரவும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் வெளிப்படையாகப் பிரதமர் மோடிக்கு எதிராகக் கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் டெல்லியில் போராட்டங்கள் தொடர்ந்து வருகிறது.

Netizens shocked to see video of Punjab farmer says Modi will be killed in 2-3 years

பகீர்: விவசாயிகள் போராட்டம் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மற்றொரு புறம் பிரதமர் மோடியை அச்சுறுத்தும் வகையிலான வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகிறது.. பஞ்சாபில் காலடி எடுத்து வைத்தால் அவருக்குப் பாடம் கற்பிக்கப்படும் என்று சமீபத்தில் விவசாயி ஒருவர் சொன்ன வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது. நாட்டின் பிரதமரைப் பார்த்து இப்படிப் பேசலாமா என்று பலரும் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே இப்போது இணையத்தில் பரவும் மற்றொரு வீடியோவில் அதையும் தாண்டுவதாக இருக்கிறது. அந்த வீடியோவில் விவசாயி ஒருவர், அடுத்த 2-3 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொல்லப்படுவார் என்று வெளிப்படையாக மிரட்டுவது போல இருக்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலை மிரட்டல்: அந்த வீடியோவில் செய்தியாளர் கேட்கும் கேள்விக்குப் போராடும் நபர் ஒருவர், "அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மோடி கொல்லப்பட்டார் என்ற செய்தியை நீங்கள் கேட்பீர்கள்" என்று வெளிப்படையாகவே மிரட்டுகிறார். அதேநேரம் இந்த வீடியோ உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும், அந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களும் இல்லை.

திடீரென இந்த வீடியோ டிரெண்டாகும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் இந்த பேச்சை மிக கடுமையாகச் சாடி வருகின்றனர். மேலும், சம்மந்தப்பட்ட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி இதுபோல பேசும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

முதல்முறை இல்லை: பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் வந்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என விவசாயி ஒருவர் எச்சரித்த வீடியோ சமீபத்தில் தான் இணையத்தில் வெளியான நிலையில், சில நாட்களில் மீண்டும் இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது. மோடி முன்பு பஞ்சாப் வந்த போது தப்பிவிட்டார்.. ஆனால் மீண்டும் வந்தால் தப்பிக்க முடியாது என்று அந்த நபர் கூறுவது போல இருந்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி மீண்டும் பஞ்சாப் சென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்த விவசாயி ஒருவர் பிரதமர் மோடியை வெளிப்படையாக மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு இந்த வீடியோ வந்துள்ளது. நடந்துகொண்டிருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாகக் கூறப்படும் விவசாயி, மோடி தனது முந்தைய பஞ்சாப் பயணத்தின் போது பின்விளைவுகளிலிருந்து தப்பினார், ஆனால் அவர் திரும்பினால் தப்பிக்க முடியாது என்று கூறினார்.

பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யும் சட்டம் வேண்டும். விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தை ஒடுக்க மத்திய அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+