போலி கணக்கு.. பிஆர் வேலை.. உதவி செய்வதாக ஏமாற்றுகிறாரா சோனு சூட்?.. அடுக்கப்படும் குற்றச்சாட்டுகள்!
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு நடிகர் சோனு சூட் உதவி செய்வதாக நாளுக்கு நாள் பல செய்திகள் வெளியாகும் நிலையில், சோனு சூட் செய்வது போல நடிக்கிறார், அவர் உண்மையில் யாருக்கும் உதவி செய்வது கிடையாது என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
Recommended Video
பிரபல நடிகர் சோனு கொரோனா முதல் அலையில் இருந்து இந்தியாவில் பலருக்கும் உதவி செய்வதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு லாக்டவுன் நேரத்தில் பேருந்துகளை தயார் செய்வது, மருந்துகள் வாங்கி கொடுப்பது, பெட்களை ஏற்பாடு செய்வது என்று சோனு சூட் கடந்த ஒரு வருடமாக நிறைய உதவிகளை செய்வதாக செய்திகள் வருகின்றன.
சோனு சூட்டை சூப்பர் ஹீரோவாக வர்ணித்து, அவரை மக்களை காக்கும் ஹீரோவாக காட்டி இணையத்தில் நிறைய புகைப்படங்களும் பரவிக்கொண்டு இருக்கின்றன.

எப்படி
இந்த நிலையில்தான், சோனு சூட் செய்யும் உதவிகள் மீது இணையத்தில் பல நெட்டின்சன்கள் கேள்விகள் மற்றும் சந்தேங்களை எழுப்பி உள்ளனர். நெட்டிசன்கள் வைக்கும் புகார்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். முதலில் சோனு சூட்டிடம் டிவிட்டரில்தான் பலர் உதவி கேட்கிறார்கள். ஆனால் இப்படி டிவிட்டரில் உதவி கேட்கும் நபர்களும் கணக்குகள் எல்லாம் ஒன்று ஒரு வாரம் முன் தொடங்கப்பட்ட கணக்காக இருக்கிறது அல்லது சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட கணக்காக உள்ளது.

சந்தேகம்
கணக்கை தொடங்கி 10 டிவிட் கூட போடாத கணக்குகள் நேராக சோனு சூட்டிடம் உதவி கேட்கிறார்கள். 10 நிமிடத்தில் இவர்களுக்கு உதவி செய்துவிட்டதாக சோனு சூட் பதில் அளிக்கிறார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சோனு சூட் உதவி செய்த சில நாட்களில் அந்த கணக்குகள் டி ஆக்டிவேட் . சோனு சூட் உதவியதாக கூறப்படும் பல கணக்குகள், உதவி கிடைத்தவுடன் டி ஆக்டிவேட் செய்கின்றன.

உண்மை இல்லை
பொதுவாக இணையத்தில் பிஆர் வேலைகள் இப்படித்தான் நடக்கும். திடீரென நிறைய பாட் கணக்குகளை பொய்யாக உருவாக்கி டிவிட்டர் டிரெண்டுகளை செய்துவிட்டு, பின் அதை டி ஆக்டிவேட் செய்து விடுவார்கள். அப்படித்தான் சோனு சூட்டிடம் உதவி கேட்கும் கணக்குகள் பெரும்பாலும் பொய்யான கணக்குகளாக உள்ளது. பெரும்பாலும் இதில் டிபி புகைப்படம் இருப்பது இல்லை, பெரிய அளவில் பின்தொடர்பாளர்கள் இல்லை.

வேறு சந்தேகம்
இதில் இன்னொரு சந்தேகம் சோனு சூட் உதவுவதாக டிவிட்டரில் டேக் செய்யும் நபர்கள் எல்லாம், 10-15 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒன்று பாஜகவை சேர்ந்தவர்கள் அல்லது சோனு பேன்ஸ் கணக்கை கொண்டவர்கள். அதாவது ஒரு குறிப்பிட்ட வளையத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் உதவி செய்ததாக சோனு சூட் டிவிட் செய்து வருகிறார். இதெல்லாம் போக உண்மையாக உதவி கேட்கும் பலரை சோனு சூட் கண்டுகொள்வது இல்லை.

பொய்யான உதவி
உதாரணமாக ஒரு பொய்யான கணக்கு போன்ற தோற்றம் கொண்ட, 10 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட கணக்கு உதவி கேட்டால், அதற்கு உதவி செய்துவிட்டதாக சோனு பதில் அளிக்கிறார். ஆனால் உண்மையில் ஒருவர் தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டால் அதை சோனு சூட் திரும்பி கூட பார்ப்பது இல்லை. இதனால் சோனு சூட், தனது குழுவை வைத்து பொய்யாக கணக்கு தொடங்கி, பொய்யாக உதவி கேட்டு, அந்த உதவியை செய்துவிட்டதாக நடிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
குழப்பம்
இதில் இன்னொரு சந்தேகம், சோனு சூட் உதவி செய்யும் கணக்குகள் எல்லாம் இரண்டு வகையை சேர்ந்ததாக மட்டுமே உள்ளது.
வகை 1 - புதிதாக தொடங்கப்பட்ட, எந்த போட்டோவும் இல்லாத கணக்குகள், இவர்கள் 10 -15 பேரை மட்டுமே பின் தொடர்கிறார்கள், அதில் பெரும்பாலான கணக்குகள் சோனு சூட் பேன்ஸ் குழு கணக்குகள்.
வகை 2- பாஜக ஐடி செல் கணக்குகள். இவையும் புதிதாக தொடங்கப்பட்டது. இதில் சோனு சூட் ரீ டிவிட்களை தவிர வேறு எதுவும் இல்லை.
|
எல்லாம் பொய்யா?
இதெல்லாம் போக ஒடிசாவில் உதவி கேட்ட ஒருவருக்கு டிவிட்டரில் இரண்டு நாட்கள் முன் உதவி செய்துவிட்டதாக சோனு சூட் பதில் அளித்தார். உங்களுக்கு கஞ்சம் சிட்டி மருத்துவமனையில் பெட் ஏற்பாடு செய்துள்ளேன் என்று கூறி இருந்தார். ஆனால் இதற்கு பதில் அளித்த கஞ்சம் மருத்துவமனை, எங்களுக்கு சோனு சூட் தரப்பில் இருந்து அப்படி கோரிக்கை வரவில்லை, எங்களிடம் ஏற்கனவே பெட்களை ஏற்பாடு செய்ய தனி உதவிக்குழு இருக்கிறது .. நீங்கள் உதவி செய்ததாக கூறும் நபர் வீட்டு சிகிச்சையில் இருக்கிறார் என்று கூறியுள்ளது.
|
வலுக்கும் சந்தேகம்
இதுமட்டுமின்றி சோனு உதவி செய்ததாக ரீ டிவிட் செய்யும் நபர்கள் சிலர், எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை, சோனு பொய் சொல்கிறார் என்றும் புகார் வைக்கிறார்கள். முன்னதாக அசாம், கேரளா, ஒடிசா போன்ற மாநில அரசுகள் கடந்த வருடம் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் தங்கள் மாநில மக்களை மீட்டு கொண்டு வர தனி விமானம் ஏற்பாடு செய்ய அனுமதி கேட்ட போது, அதை மத்திய அரசு அனுமதிக்கவில்லை. மத்திய அரசே ஏர் இந்தியா மூலம் விமானங்களை ஏற்பாடு செய்தது.

மாநில அரசு
மாநில அரசுக்கு இப்படி விமானங்களை ஏற்பாடு செய்ய அனுமதிக்காத போது சோனு சூட் மட்டும் எந்த தடங்கலும் இன்றி தனி விமானங்களை ஏற்பாடு செய்து பலரை வெளிநாடுகளில் இருந்து மீட்டு கொண்டு வந்தது எப்படி என்று கேள்வி எழுகிறது. ஒரு வருடமாக இவர் உதவி செய்கிறார், இதற்கெல்லாம் பணம் எப்படி வருகிறது. இவருக்கு பின் யார் இருக்கிறார், இவர் உதவி செய்யும் கணக்குகள் எல்லாம் ஏன் ஒரே மாதிரி இருக்கிறது என்று பல கேள்விகள் எழுந்துள்ளன.

உண்மை என்னவோ?
தன் மீது அடுக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சோனு சூட் இன்னும் பதில் அளிக்காத நிலையில், இணையத்தில் அவருக்கு எதிராக பலர் கேள்வி எழுப்ப தொடங்கியது. இவரை அரசியல் ரீதியாக வரும் காலங்களில் முன்னிறுத்த வேண்டும் என்று இப்படி ஒரு பிம்பம் உருவாக்கப்படுவதாகவும் புகார் வைக்கப்படுகிறது. அரசியல் திட்டத்தை மனதில் வைத்து இவரை சிலர் முன்னிறுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது... எது உண்மை.. எது பொய் என்பது போக போகத்தான் தெரியும்!
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications