செப்.26, 27-ல் டெல்லி சட்டசபை சிறப்பு கூட்டம்-சிஎம் அதிஷி உரையாற்றுகிறார்- முட்டுக்கட்டை இருக்கிறதா?
டெல்லி: டெல்லி யூனியன் பிரதேச சட்டசபையின் சிறப்புக் கூட்டம் செப்டம்பர் 26, 27 ஆகிய இரு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்புக் கூட்டத்தில் டெல்லி புதிய முதல்வராக பொறுப்பேற்க துணை நிலை ஆளுநரிடம் உரிமை கோரியுள்ள அதிஷி உரையாற்ற இருக்கிறார். அதேநேரத்தில் டெல்லி புதிய முதல்வராக அதிஷி எப்போது பதவியேற்க உள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. முதல்வர் அலுவலகம செல்லக் கூடாது; முதல்வராக கோப்புகளை கையாளக் கூடாது என நிபந்தனை விதித்தது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டெல்லியின் புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தமது ராஜினாமா கடிதம் கொடுத்தார். அப்போது புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தை அதிஷியும் ஆளுநரிடம் கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படியே எப்போது முதல்வராக பதவியேற்பது? புதிய அரசு பதவியேற்பது? என்பது முடிவு செய்யப்படும்.
இந்த நிலையில் டெல்லி சிறப்பு சட்டசபை கூட்டம் வரும் 26,27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அன்றைய தினம், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற இருக்கிறார். அதேநேரத்தில் புதிய முதல்வராக அதிஷி எப்போது பதவியேற்பார் என்பது தெரியவில்லை என்கின்றன ஆம் ஆத்மி வட்டாரங்கள்.
இது தொடர்பாக சட்ட வல்லுநர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர், அமைச்சர்களை ஜனாதிபதிதான் நியமனம் செய்ய வேண்டும். டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும்பான்மை இருக்கும் நிலையில் அதிஷி முதல்வராக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்கின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications