"உலகிற்கு பேராபத்து.." கொரோனா பாதிப்பால் அதிகரிக்கும் இதய செயலிழப்பு! மிரளும் ஆய்வாளர்கள்! என்னாச்சு
டெல்லி: இந்தியா உட்பட உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவால் இதய செயலிழப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு சமீபத்திய நாட்களில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சீனா என உலகின் பல நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே வல்லுநர்கள் கொரோனா தொடர்பான புதிய வார்னிங்கை கொடுத்துள்ளது. இது உலகெங்கும் சுகாதார ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதய செயலிழப்பு: இது "இதய செயலிழப்பு" தொற்றுநோயை ஆரம்பித்து வைக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இப்போது புதிதாகப் பரவும் ஜேஎன் 1 கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
இந்த புதிய ஜேஎன் 1 கொரோனா காரணமாகக் கடந்த சில வாரங்களாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. இந்த புதிய ஜேஎன் 1 புதிய வேரியண்ட் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு இதய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகச் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இதய பாதிப்பு: ஜப்பானைச் சேர்ந்த உயர்மட்ட ஆராய்ச்சி நிறுவனமான ரைகன் ஆய்வாளர்கள் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பிகளை தான் பற்றிக்கொள்ளும். இந்த ஏற்பிகள் இதயத்தில் அதிகம் இருக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது கொரோனா பாதிப்பு ஏற்படும் பலருக்கு இதய செயல்பாடு பாதிக்கப்படலாம் என்பதே எச்சரிக்கையாக இருக்கிறது.
இதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. நீண்ட கால கொரோனா பாதிப்பு காரணமாக வரும் காலத்தில் இதய செயலிழப்பு ஏற்படும் ஆபத்தில் இருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.,
ஆய்வு சொல்வது என்ன: இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "நீண்டகால கொரோனா பாதிப்பு நேரடியாக இதயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பதற்கு இன்னும் உறுதியான ஆதாரம் இல்லை என்றாலும், மனித இதய திசு மாதிரியைப் வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் இதற்கான வாய்ப்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போது பரவும் கொரோனா பாதிப்பு என்பது அதிகப்படியான இதயப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இது உலகளாவிய சுகாதார பிரச்சினையை ஏற்படுத்தும்" என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா உட்பட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது. விடுமுறைக் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது அனைவருக்கும் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. புது ஜேஎன் 1 கொரோனாவால் இந்தியாவில் மட்டும் 44 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
எச்சரிக்கை: அதிகரித்து வரும் காய்ச்சலுடன் சேர்ந்து, இந்த குளிர்காலத்தில் நோய் பாதிப்புகளில் அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். BA.2.86 அல்லது பைரோலா என்ற ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து தான் இந்த ஜேஎன் 1 வேரியண்ட் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் கடந்த செப். மாதம் இந்த புது வகை கொரோனா வகை கண்டறியப்பட்டது.
அனைத்து வைரஸ்கள் மீதும் ஸ்பைக் புரதம் இருக்கும், இவை பார்க்கச் சிறிய கூர்முனைகளைப் போல இருப்பதால் இதை "ஸ்பைக்" என்று அழைப்பார்கள். எந்தவொரு வைரஸும் மனிதரைத் தாக்கும் போது, அவை நமது உடலில் இருக்கும் செல்களுடன் வலுவான பிணைப்பை ஏற்படுத்த இந்த ஸ்பைக் தான் பெரியளவில் உதவுகிறது. காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், தொண்டைப் புண், தலைவலி, இரைப்பை குடல் பிரச்சினைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications