வருமான வரி சட்டம்.. ரீபண்ட் விதிகளில் மாற்றம்? இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? புதிய ரூல்ஸ் என்ன

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு இப்போது புதிதாக வருமான வரி மசோதா 2025ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளது.. இந்த புதிய வருமான வரி சட்டம் பழைய சட்டத்தை விட எளிமையாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே வருமான வரியைத் தாக்கல் செய்து ரீபண்ட் பெறுவது தொடர்பாக வருமான வரித்துறை முக்கிய விளக்கத்தை அளித்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்யும் முறையை எளிமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் தான் புதிய வருமான வரி மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்தார்.

income tax budget 2025 personal finance

ஏற்கனவே உள்ள பழைய வருமான வரி சட்டம் சிக்கலாக இருப்பதால் அது அனைத்து தரப்பு மக்களுக்கும் புரிவதில்லை என்ற புகார் இருந்தது. இந்த சிக்கலைச் சரி செய்யும் வகையில் அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் புதிய வருமான வரி சட்டத்தை உருவாக்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதிய வருமான வரி சட்டம்

இந்த புதிய வருமான வரி சட்டம் தொடர்பாக மக்களுக்குப் பல கேள்விகள் உள்ளன. அதில் ஒன்று தான் ஐடிஆர் எனப்படும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது. அதாவது வருமான வரிக் கணக்கை (ITR) கடைசி தேதிக்கு முன்பு தாக்கல் செய்யாவிட்டால்.. அவர்களால் ரீபண்ட் பெற முடியாது என்று சொல்லி தகவல் பரவியது. ஒரு வேளை மிஸ் செய்துவிட்டால் ரீபண்ட் கிடைக்காதோ என மக்கள் பயந்துவிட்டனர்.

ரீபண்ட் விதிகள்

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "புதிய வருமான வரி சட்டம் ரீபண்ட் பெற விரும்புவோர் நிச்சயம் கடைசி தேதிக்குள் வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதியாக உள்ளது. அதற்குள் தாக்கல் செய்தால் மட்டுமே ரீபண்ட் கிடைக்கும்.

பழைய வருமான வரி சட்டத்தில் ஒருவர் கடைசி தேதியைத் தவறவிட்டாலும் கூட டிசம்பர் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்து ரீபண்ட் வாங்கலாம் என்று இருந்தது. ஆனால், அதை புதிய சட்டத்தில் மாற்றியுள்ளனர். எனவே, யாராவது கடைசி தேதியை மிஸ் செய்தால் அது ரீபண்ட் பெற முடியாது. எனவே, இது சிக்கலைத் தரும்" என்று தெரிவித்தார்.

விளக்கம்

இதற்கிடையே வருமான வரித் துறை சார்பில் இது தொடர்பாக விளக்கம் தரப்பட்டுள்ளது. ரீபண்ட் விதிகள் குறித்து எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் வழக்கமான நடைமுறையே தொடரும் என்றும் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதாவது ரீபண்ட் எந்த விதிகளின் கீழ் பிராசஸ் செய்யப்படும் என்பது தான் மாற்றப்பட்டுள்ளதே தவிர மசோதாவில் ரீபண்ட் தொடர்பான விதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் நிறைவேறும் போது எப்படி இருக்கும்

அதாவது வருமான வரியைக் கடைசி தேதிக்குப் பிறகுத் தாக்கல் செய்தாலும் ரீபண்ட் பெறும் வகையிலேயே புதிய சட்டம் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், புதிய மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை. அது கடைசியாகத் தாக்கலாகும் போது பல திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கலாம். எனவே, கடைசியாக நிறைவேறும் சட்டத்தில் என்ன விதிகள் இருக்கிறதோ.. அதன் அடிப்படையிலேயே ரீபண்ட் எல்லாம் பிராசஸ் செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+