நம்பவே முடியலையே.. இவர்தானா உமர் அப்துல்லா? அடர் தாடியுடன் 2-வது போட்டோ சமூக வலைதளங்களில் வைரல்
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசால் சிறை வைக்கப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் புதிய போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக்கியது.

மேலும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட ஆயிரக்க்கணக்கானோர் விசாரணைகள் இன்றி சிறைகளிலும் வீட்டு காவல்களிலும் அடைக்கப்பட்டனர். 6 மாதங்களுக்குப் பலர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனால் ஜம்மு காஷ்மீரின் அரசியல் அடையாளங்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். உமர் அப்துல்லாவை விடுதலை செய்யக் கோரி அவரது சகோதரி உச்சநீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
இம்மனு மீது வரும் 17-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடர்ந்த தாடியுடன் உமர் அப்துல்லா, மருத்துவர் ஒருவருடன் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்தபடம் எப்போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.
ஏற்கனவே இதேபோல் தாடியுடன் உமர் அப்துல்லா இருக்கும் படத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிர்ச்சியுடன் வெளியிட்டிருந்தார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இந்த படத்தை பகிர்ந்து. உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications