டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆத்திச்சூடியை தொடர்ந்து.. பிணியின்மை என்ற குறளையும் மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

Google Oneindia Tamil News

Recommended Video

    Budget 2020: Nirmala sitharaman highlights Thirukkural

    டெல்லி: ஆத்திச்சூடியை தொடர்ந்து பிணியின்மை செல்வம் என தொடங்கும் குறளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டியுள்ளார்.

    2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.

    Nirmala Sitharaman highlights Thirukural

    அப்போது அவர் பேசுகையில் நிலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அவர் ஆத்திச்சூடியில் ஔவையார் கூறிய பூமி திருத்தி உண் என்பதை மேற்கோள் காட்டினார். நிர்மலா கூறுகையில் மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார். எனவே நிலத்தை பயனுள்ள வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதன் பொருள் ஆகும் என்றார்.

    இதைத் தொடர்ந்து திருக்குறளையும் நிர்மலா மேற்கோள் காட்டி பேசினார்.

    "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
    அணியென்ப நாட்டிவ் வைந்து"

    என்ற குறளை கூறி அதன் பொருளையும் விளக்கினார்.

    அதாவது நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பமான வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு அல்லது காவல் ஆகிய 5 செல்வங்கள் மட்டுமே நாட்டிற்கு அழகு சேர்க்கும். எனவே திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார். மேலும் மோடியை மாமன்னர் என புகழாரம் சூட்டினார்.

     "பூமி திருத்தி உண்"- பட்ஜெட் உரையில் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

    English summary
    Finance Minister Nirmala Sitharaman highlights Thirukkural and says Modi government runs according to that Kural.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X