டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் சேலையில் மயில், தாமரை! பரிசாக தந்தது யார் தெரியுமா? சிறப்புகள் என்ன?

பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை யார் பரிசளித்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை யார் பரிசளித்தது, எங்கிருந்து வந்தது தெரியுமா?

நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகி பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்குவதற்கு முன்பு வரை நிதியமைச்சர் என்னென்ன திட்டங்களை கொண்டு வருவார், வரி சலுகை இருக்கிறதா, எந்த பொருட்களுக்கு விலை குறைகிறது, எதன் விலை ஏறுகிறது என்பது குறித்த கவலைதான் பொதுமக்களுக்கு இருக்கும்.

ஆனால் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது அவர் அணிந்திருக்கும் சேலையும் பேசும் பொருளாகிவிடுகிறது. அவர் கட்டி வரும் நிறத்திற்கேற்ப பட்ஜெட்டும் அப்படியே இருக்கும் என மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Replacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலைReplacing old political vehicle.. சாரி சாரி! நிர்மலா சீதாராமனின் டங் ஸ்லிப் ஆனதால் அவையில் சிரிப்பலை

பட்ஜெட்

பட்ஜெட்


டல்லடிக்கும் நிறத்தில் கட்டியிருந்தால் பட்ஜெட்டும் டல்லடிக்கும் என்றும் பளீச் நிறத்தில் கட்டியிருந்தால் பொதுமக்கள் மகிழும் அளவுக்கு பட்ஜெட்டில் விஷயம் இருக்கும் என்றும் மக்கள் யூகிக்கும் அளவுக்கு அவரது சேலை கவனிக்கப்பட்டு வருகிறது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் கட்டி வந்த புடவை மிகவும் பிரபலமாகியுள்ளது. பொதுவாகவே நிர்மலா சீதாராமன் கைத்தறி காட்டன் புடவைகளையே அதிகம் விரும்புவார். அதை அவரே பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளார். அவரின் விருப்பத்திற்கேற்ப அவர் பட்ஜெட் நாளில் கட்டும் புடவைகளும் காட்டன் புடவைகளாகவே இருக்கும்.

நிதியாண்டுக்கான பட்ஜெட்

நிதியாண்டுக்கான பட்ஜெட்

2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டியிருந்த சேலை மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பரிசாக கொடுத்தது. இந்த சேலை கர்நாடகா மாநிலம் தர்வாட் மாவட்டத்தில் நெய்யப்பட்ட பருத்தியிலால் ஆன புடவையாகும். புடவை, நவலகுண்டா எம்ப்ராய்டரி வேலைபாடுகளுடன் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கைகளால் வடிவமைக்கப்பட்ட சேலை

கைகளால் வடிவமைக்கப்பட்ட சேலை


இந்த எம்ப்ராய்டரி முழுக்க முழுக்க கைகளாலேயே வடிவமைக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த சிவப்பு நிற புடவை தர்வாட் மாவட்டத்தில் உள்ள ஆரதி கைத்தறியில் வாங்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு 7 கைத்தறி புடவைகள் அனுப்பப்பட்டுள்ளது. அதிலிருந்து அவர் 2 புடவையை தேர்வு செய்துள்ளார். அதில் ஒன்று சிவப்பு நிற புடவை, மற்றொன்று நீல நிறம். சிவப்பு நிறத்தைத்தான் அவர் பட்ஜெட்டின் போது கட்டியிருந்தார்.

சிவப்பு புடவையில் மயில்

சிவப்பு புடவையில் மயில்

அந்த சிவப்பு புடவையில் மயில், தாமரை, கோவில் கோபுரம் என எம்ப்ராய்டரி வேலைபாடுகள் உள்ளன. புடவையின் பார்டர் பிரவுன் நிறத்தில் கோல்டன் நிற ஜரிகையுடன் நெய்யப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது ரஸ்ட் பொம்காய் புடவையை நிர்மலா அணிந்திருந்தார். இது ஒடிஸாவின் தனித்துவம் வாய்ந்த புடவையாகும். பிரவுன் நிறத்தில் சில்வர் பார்டர் இருந்து. புடவையில் உள்பகுதிகளில் சில்வர் நிறத்தில் போல்கா டாட்ஸ் போல் வேலை செயயப்பட்டிருந்தது.

2021 ஆம் ஆண்டு பட்ஜெட்

2021 ஆம் ஆண்டு பட்ஜெட்

அது போல் 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட புடவையை அணிந்திருந்தார். அந்த புடவை போச்சம்பள்ளியை சேர்ந்தது. இக்கட் பேட்டர்ன் இருந்தது. இந்த புடவை தெலுங்கானா மாநிலத்தில் பூடான் போச்சம்பள்ளி என்ற பகுதியில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவின் பட்டு நகரம் என அழைக்கப்படுகிறது போச்சம்பள்ளி. அது போல் கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சள் நிறத்தில் மெல்லிய நீல நிறத்தில் பார்டர் கொண்ட புடவையை அணிந்திருந்தார். முதல்முறையாக நிதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட 2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பிங்க் நிறத்தில் மங்கலகிரி சில்க்கை அணிந்திருந்தார். அதில் கோல்டன் நிறத்தில் பார்டர் இடம்பெற்றிருந்தது.

English summary
Finance Minister Nirmala Sitharaman's budget saree was gifted by Karnataka's union minister Pralhad Joshi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X