ஜம்மு காஷ்மீரில் ஆர்டிகிள் 370 நீக்கம்.. தீவிரவாத ஆட்சேர்ப்பு குறைவு .. சொல்கிறார் நிர்மலா சீதாராமன்
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் இருந்து பயங்கரவாத ஆட்சேர்ப்பு 16% குறைந்துள்ளதாகவும், அரசாங்க தரவுகளின்படி, 2021 இல் 180 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர் எனவும், இந்த ஆண்டு இதுவரை 24 நடவடிக்கைகளில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
1951ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசியலமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.
இந்நிலையில் பெரும்பான்மையுடன் இரண்டாவது தடவையாக ஆட்சியில் அமர்ந்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு , காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கியது

370ஆவது சட்டப்பிரிவு நீக்கம்
ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் அப்போது ஏற்பட்ட நிலையில், மத்திய் அரசின் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால், சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் அதாவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் வகையில் யூனியன் பிரதேசமான மாற்றப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீரில் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியன வலுவான நிலையை அடைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பட்ஜெட்
2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மற்றும் மத்திய பட்ஜெட்டுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற்றன

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்நிலையில் மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் குறித்த விவாதத்தின் போது பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, பள்ளத்தாக்கில் 'சாதாரண சூழலை' மீட்டெடுக்க மத்திய அரசின் முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளன என்று கூறினார். மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளை நடுநிலையாக்கும் முயற்சிகள் கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற்றதாகவும், அரசாங்க தரவுகளின்படி, 2021இல் 180 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த ஆண்டு இதுவரை 24 நடவடிக்கைகளில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனக் கூறினார்.

தீவிரவாதம் குறைவு
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முழுவதும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளதால், ஜம்மு பள்ளத்தாக்கில் இருந்து பயங்கரவாத ஆட்சேர்ப்பு 16 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா, தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஆயுதப் படைகள் உள்ளூர் காவல்துறையுடன் இணைந்து 89 பயங்கரவாத தொகுதிகளை முறியடித்துள்ளன எனவும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் முதலீடுகள் அதிகரித்துள்ளன என்றார்.
Recommended Video

குவியும் முதலீடுகள்
தற்போது யூனியன் பிரதேசம் முதலீடுகளை ஈர்ப்பதாக கூறிய சீதாராமன், வளைகுடா ஒத்துழைப்பு நாடுகள் அங்கு முதலீட்டு வாய்ப்புகளை நாடுகின்றன என்றும், இத்தகைய முயற்சிகள் அங்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, ஜம்மு காஷ்மீரில் தொழில் தொடங்க பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார். மோடி அரசின் புதிய தொழில் வளர்ச்சி மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் உள்ளூர் மக்களும் பயனடைகிறார்கள் என்ற அவர்,"250 மாநில சட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டாலும், யூனியன் பிரதேசத்தின் விரிவான வளர்ச்சிக்காக 137 சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன எனவும், முன்பு அங்கு எந்த உரிமையும் இல்லாதவர்கள் இப்போது அரசு வேலைகளைப் பெறலாம், சொத்துக்களை வாங்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications