டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்கெல்லாம் வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்.. டோன்ட் ஒர்ரி.. நிர்மலாவின் பொளேர் பேச்சு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வெங்காயம், பூண்டு சாப்பிடவே மாட்டோம்- நிர்மலாவின் பொளேர் பேச்சு!

    டெல்லி: நான் அவ்வளவாக வெங்காயம், பூண்டு சாப்பிடமாட்டேன் என வெங்காய விலை குறித்த விவாதத்தின் போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    வெங்காய விலை குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று விவாதம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நிர்மலா சீதாராமன் பேசுகையில் நான் அந்த அளவுக்கு நிறைய பூண்டு, வெங்காயத்தை சாப்பிட மாட்டேன்.

    அதனால் கவலையில்லை. வெங்காயத்தை சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான் என்றார். வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.

    வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.. திகாரில் இருந்து வந்தவுடன் ப.சிதம்பரம் அதிரடி வெங்காய விலையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு.. திகாரில் இருந்து வந்தவுடன் ப.சிதம்பரம் அதிரடி

    சிரிப்பலை

    சிரிப்பலை

    தான் அதிகமாக வெங்காயத்தை சாப்பிட மாட்டேன் என நிர்மலா கூறியதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த எம்பி ஒருவர், வெங்காயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் எரிச்சலை உண்டுபண்ணும் என கூறினார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    வெங்காயத்தின் விலை உயர்வு குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இடைத்தரகர்கள் அல்லாமல் நேரடி விற்பனை திட்டத்தின் மூலம் வெங்காயம் கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.

    விண்ணை முட்டும் விலை

    விண்ணை முட்டும் விலை

    இந்தியாவில் கடந்த சில நாட்களாக வெங்காய விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. பெரிய வெங்காயத்தின் விலை 150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலையும் 130 முதல் 200 வரை விற்பனையாகிறது.

    ஏழை மக்கள் பாதிப்பு

    ஏழை மக்கள் பாதிப்பு

    இதனால் நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு பொருட்களின் விலைகளையும் ஹோட்டல் நிர்வாகம் உயர்த்தி விட்டது. பொங்கல் பண்டிகை வரை இதே நிலை நீடிக்கலாம் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman says that I dont eat much Onion during a debate on Onion Price hike throughout India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X