நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மணி நேரம் பட்ஜெட் உரை வாசித்தார் தெரியுமா?
டெல்லி: இந்தியா முழுவதும் பட்ஜெட் குறித்த பேச்சாக தான் இருக்கிறது. இன்ப அதிர்ச்சி தரும் விதமாக தனிநபர் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது என அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். அவரது பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஆண்டுகளில் எவ்வளவு நேரம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்? இதுவரை மொத்தமாக எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையை வாசித்து இருக்கிறார்? என்பது குறித்து பார்க்கலாம்.
2025 - 2026 ஆம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இதில் பிஹார் மாநிலத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது தவிர கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் எதிர்பார்த்த ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான 12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு தனி நபரின் ஆண்டு வருவாய் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோர் இனி வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. கடந்த ஆண்டுகளில் எவ்வளவு நேரம் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார்? இதுவரை மொத்தமாக எவ்வளவு நேரம் பட்ஜெட் உரையை வாசித்து இருக்கிறார்? என்பது குறித்து பார்க்கலாம்..
இந்த ஆண்டு பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 15 நிமிடங்களில் முடித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்தாண்டு அதாவது 2024 - 2025 பட்ஜெட் உரையை ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் வாசித்தது குறிப்பிடத்தக்கது.
முதன் முறையாக 2019-2020 நிதியாண்டில் தான் முதன்முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார். அதற்கு பிறகு 2020 - 2021 ஆம் நிதி ஆண்டில் 2 மணி நேரம் 42 நிமிடங்களும், 2021 - 2022 நிதியாண்டில் 1 மணி நேரம் 40 நிமிடங்களும் பட்ஜெட் உரையை வாசித்து இருந்தார்.

அதற்குப் பிறகு 2022 - 2023 ஆம் நிதியாண்டில் ஒரு 1 நேரம் 32 நிமிடங்களும், 2023 - 2024 ஆம் நிதி ஆண்டில் 1 மணி நேரம் 26 நிமிடங்களும் பட்ஜெட் உரையை தாக்கல் செய்திருந்தார். குறைந்தபட்சமாக 2024 - 2025 இல் 57 நிமிடங்கள் மட்டுமே இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய வரலாற்றில் அதிக நேரம் பட்ஜெட் தாக்கல் செய்த பெண் நிதி அமைச்சர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும் அவர் இதுவரை 8 முறை அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications