டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறு விவசாயிகளின் கடன்களுக்கான வட்டி மானியம் மே 31 வரை நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை 4 மணிக்கு இரண்டாவது நாளாக நிருபர்களைச் சந்தித்து வருகிறார். அப்போது, புலம் பெயர் தொழிலாளர்கள் நலம், விவசாயத் துறை உட்பட 9 வகை அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக அவர் அறிவித்தார்.

Recommended Video

    Nirmala sitharaman economic package | Concessional credits for farmers

    கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக, 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.

    Nirmala Sitharaman will meet the press at 4pm on today

    இது தொடர்பான விளக்கத்தை, நேற்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார் நிர்மலா சீதாராமன். அப்போது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, கடன் சலுகை, தொழிலாளர்களுக்கு பிஎஃப் சலுகை, ரியல் எஸ்டேட் துறையினருக்கு ஒப்பந்தங்களுக்கான காலநீட்டிப்பு, சலுகை உள்ளிட்ட சில அம்சங்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில், இன்று மாலை 4 மணிக்கு, தொடர்ந்து இரண்டாவது நாளாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    9 வகை அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறோம். 3 அறிவிப்புகள் புலம்பெயர் தொழிலாளர்களுக்கானது. ஒரு அறிவிப்பு முத்ரா வங்கி கடன் தொடர்பானது. மற்றொரு அறிவிப்பு தெருவோர வியாபாரிகள் தொடர்பானது. வீட்டுவசதி சார்பாக ஒரு அறிவிப்பும், பழங்குடியின மக்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றி ஒரு அறிவிப்பும், சிறு விவசாயிகள் தொடர்பாக இரண்டு அறிவிப்புகள் வெளியிடப்படும்.

    இன்று சிறு விவசாயிகளுக்கானது இரண்டு அறிவிப்புதான் என்றாலும் கூட விவசாயிகளுக்கான அறிவிப்பு நாளையும் தொடரும். அந்த பட்டியல் பின்னர் வெளியிடப்படும்.

    விவசாயிகளுக்கு மானிய விலையில் அளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கான வட்டி மானிய சலுகை மார்ச் 1ம் தேதியாக இருந்தது. அது மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட ரூ .86,600 கோடியில், 63 லட்சம் கடன்கள், 2020 மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை வழங்கப்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்துதல்.. கொரோனா சோதனை.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.. முதல்வர் அதிரடி!தனிமைப்படுத்துதல்.. கொரோனா சோதனை.. புதிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.. முதல்வர் அதிரடி!

    புலம்பெயர் தொழிலாளர் நலம்: நகர்ப்புறங்களில் வீடற்றவர்களுக்கு தங்குமிடம் கொடுத்து, அந்த மக்களுக்கு 3 நேரமும் உணவு வழங்கப்படுகிறது.

    ரூ.11,000 கோடியை, மாநில பேரிடர் நிவாரண நிதியாக மாநிலங்களுக்கு வழங்கியுள்ளோம். அது புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்க பயன்படுத்தப்படுகிறது. மாநிலங்களின் பங்கும் இதில் இருக்கிறது. ஆனால், மத்திய அரசு, வழங்கிய நிதி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சேர்த்துதான். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    English summary
    Union Finance Minister Nirmala Sitharaman will address the media again on Thursday at 4 pm in the second phase of announcements on government’s Rs 20 lakh crore package.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X