ஆஹா.. நிறைந்த ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்!
Recommended Video
டெல்லி: வழக்கத்துக்கு மாறாக ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்போகிறது மத்திய அரசு. எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், நல்ல நேரம், வளர்பிறை, தேய்பிறை போன்ற பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு தான் முக்கியமான விஷயங்களை முடிவெடுப்பார்கள்.
கடவுள் நம்பிக்கை கிடையாது அல்லது பகுத்தறிவுபடிதான் செயல்படுவோம் என்று கூறக்கூடிய கட்சிகளின் தலைமை கூட, முக்கியமான விஷயங்களில், நாள், நட்சத்திரம் பார்த்து தான் முடிவு எடுப்பதை நாம் பலமுறை கவனித்தோம்.

ஆனால் இந்துத்துவா பேசக்கூடிய பாஜக ஆட்சியில், இன்று தாக்கல் செய்யப்பட கூடிய பட்ஜெட் நிறைந்த ராகு காலத்தில் தான் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம்..
பொதுவாக எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், ராகுகாலத்தில் செய்யக்கூடாது என்பதுதான் இந்துக்கள் நம்பிக்கை. துர்க்கை பூஜை மட்டுமே ராகு காலத்தில் மேற்கொள்ளப்படும் ஒரே நல்ல விஷயமாக இருந்து வருகிறது.
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலம். ஆனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதாவது ராகுகாலம் ஆரம்பித்த பிறகு பட்ஜெட் உரையை ஆரம்பிக்கும் அவர், அனேகமாக ராகு காலம் முடிவடையும் போது பட்ஜெட் உரையை நிறைவு செய்வார் என்றே தெரிகிறது.
இது கண்டிப்பாக ஒரு ஆச்சரியப்படத்தக்க விஷயமாகவே பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் கூட, ராகுகாலத்தில் எம்பிக்கள் அல்லது எம்எல்ஏக்கள் எழுந்து பேசுவதை தவிர்ப்பதை கூட, பல சந்தர்ப்பங்களில் பார்க்க முடியும். ஆனால், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கக்கூடிய பட்ஜெட் உரையை, அதுவும் இந்துத்துவா கொள்கை கொண்ட பாஜக அரசு, ராகு காலத்தில், தாக்கல் செய்யப் போகிறது என்பது இந்த பட்ஜெட்டை மேலும் சுவாரசியமாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications