மம்தா பானர்ஜிக்கே டஃப் கொடுத்தவர்.. 35 வயதில் அமைச்சரான யங் சேம்ப்.. யார் இந்த நிஸித் பிராமனிக்?
டெல்லி: மேற்கு வங்கத்தின் கூச் பேகர் மாவட்டத்திலிருந்து மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற நிஸித் பிராமனிக் அமைச்சரவையிலேயே மிகவும் இளம் வயதுடையவர் ஆவார். அவருக்கு வயது 35. அது போல் கூச் பேகரிலிருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் மத்திய இணை அமைச்சரும் ஆவார்.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற நிஸித் பிராமனிக் யார் என்பதை பார்ப்போம். 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைவதற்கு முன்னர் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.
இந்த நிலையில் பாஜக சார்பில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கூச் பேகர் தொகுதியில் வென்றார்.

பரப்புரை
2019-ஆம் ஆண்டு மிஷன் பெங்கால் என்ற பரப்புரையின் கீழ் நிஸித் தீவிரமாக பணியாற்றினார். அதாவது மம்தா பானர்ஜிக்கு எதிராக பணியாற்றினார். இதனால் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வடக்கு வங்கத்தில் பாஜக பெருவாரியாக வென்றது.

நிஸித்
நிஸித்தால் வடக்கு வங்கத்தில் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக மாறியது. கூச் பேகர் நாடாளுமன்றத் தொகுதிக்குள்பட்ட 9 சட்டசபைத் தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக வென்றது. அலிபுர்துவார், ஜெல்பைகுரி, டார்ஜிலிங், கலிம்போங்க ஆகிய தொகுதிகளில் பாஜக அலை வீசியது.

பாஜக எம்பி ஜான் பர்லா
பாஜக எம்பி ஜான் பர்லா மேற்கு வங்கத்திலிருந்து வடக்கு வங்கத்தை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். மாநிலத்தை பிரிக்க மம்தா பானர்ஜி அனுமதி அளிக்கவில்லை. ஆனால் ஜான் பர்லாவின் கோரிக்கைக்கு இதுவரை நிஸித் எந்தவித ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை.

நிஸித்
தற்போது ஜான் பர்லாவுடன் நிஸித்தை மத்திய அமைச்சரவையில் சேர்த்ததன் மூலம் மம்தா பானர்ஜிக்கு மோடி அரசு விடுக்கும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்படுகிறது. வெறும் 35 வயதுடைய நிஸித் பிராமனிக் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்.

பெருமை
கொல்கத்தாவின் நிழலில் இருந்த கூச் பேகரை தனியாக பிரித்து மாநில மேப்பில் இடம் பெற செய்து அனைவருக்கும் கூச் பேகரை அறிய வைத்தவர். ராஜ்போன்ஷியை சேர்ந்த முதல் மத்திய அமைச்சர் என்ற பெருமையையும் நிஸித் பெறுகிறார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications