அம்பானி வீட்டு திருமணம்! காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு முதல் பத்திரிக்கை! அடுத்து நீடா செய்த சம்பவம் செம
டெல்லி: அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், நீடா அம்பானி காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார். தனது மகனின் திருமண அழைப்பிதழை அவர் காசி விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபட்டார். ஆனந்த் அம்பானி- ராதிகா திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டின் டாப் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கு மொத்தம் மூன்று குழந்தைகள். அவர்களில் இருவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட நிலையில், அடுத்து இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடைபெற இருக்கிறது.

வழிபாடு: இதற்கிடையே ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீடா அம்பானி இன்று காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் சென்றார். தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். மேலும், தனது மகன் திருமணத்தின் முதல் அழைப்பிதழைக் காசி விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபாடு நடத்தினார்.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான திருமண ஏற்பாடுகளை அம்பானி குடும்பத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், தான் நீடா அம்பானி இன்று திடீரென காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றார். மேலும், அங்கு நடந்த , கங்கா ஆரத்தி நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.
செய்தியாளர் சந்திப்பு: பிங்க் நிற புடவை அணிந்த நீடா அம்பானி, திருமண பத்திரிக்கையை வைத்துச் சிறப்பு வழிபாடு நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நீடா அம்பானி, "நான் சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்தேன். இப்போது மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமண அழைப்பிதழை விஸ்வநாதர் சன்னதியில் வைத்து வழிபடவே இங்கு வந்தேன்.
10 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இப்போது தான் இங்கு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளில் இங்கு நடந்த வளர்ச்சிகள் மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும், கங்கா ஆரத்தியின் போது நான் இங்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். கோயில் மிகவும் நன்றாக இருக்கிறது... இங்கே உள்ள தெய்வீக சக்தியை என்னால் உணர முடிகிறது" என்றார்.
செம சம்பவம்: கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய நீடா அம்பானி, பிறகே உள்ளூர் மக்களுடன் சிறிது நேரம் உரையாடினார். மேலும், அங்குள்ள ஸ்நாக்ஸ் கடைக்குச் சென்ற அவர், அங்கும் கொஞ்ச நேரம் உரையாடிக் கொண்டிருந்தார்.
இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானி வீட்டுத் திருமணத்திற்கு ஒட்டுமொத்த மும்பையும் தயாராகி வருகிறது. ஜூலை 12ஆம் தேதி இவர்களின் திருமண விழாக்கள் தொடங்குகிறது. திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் பாரம்பரிய இந்திய உடைகளை அணிந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுநாள் ஜூலை 13ஆம் தேதி ஷுப் ஆஷிர்வாத் நடைபெறும் நிலையில், ஜூலை 14ஆம் தேதி மங்கள் உத்சவ், திருமண வரவேற்பு நடைபெறுகிறது.
ஆனந்த் அம்பானி திருமணம்: அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி என்கோர் ஹெல்த்கேர் சிஇஓ வீரேன் மெர்ச்சன்ட் மற்றும் தொழிலதிபர் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டை காதலித்து வருகிறார். இருவருக்கும் இடையேயான திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் ஜாம்நகரில் நடைபெற்றது. இந்தியாவே வியக்கும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடந்தன.
பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜூக்கர்பெர்க் அவரது மனைவி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டிரம்ப் மனைவி இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். அடுத்த மாதம் நடக்கும் இவர்களின் திருமணம் அதை மிஞ்சும் வகையில் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications