பணம் அனுப்பாதீங்க.. முடிந்தால் செல்பி அனுப்புங்கள்.. நான் கண் விழித்தால் பார்க்கிறேன்.. நித்யானந்தா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எனக்கு யாரும் பணம் அனுப்ப வேண்டாம், உடனடியாக பணம் அனுப்புவதை நிறுத்துங்கள் என நித்யானந்தா தனது சீடர்களுக்கும் பக்தர்களுக்கும் ஒரு அன்பு கட்டளை இட்டுள்ளார்.

Recommended Video

    பணம் அனுப்ப வேண்டாம்.. Nityananda-க்கு என்ன ஆச்சு? #Nithyananda | Oneindia Tamil

    இதுகுறித்து நித்தியானந்தா தனது புதிய போஸ்ட்டில் கூறுகையில், பரமசிவனின் ஆசிர்வாதங்கள்! இந்த போஸ்ட் அனைத்து பக்தர்களுக்கும் சீடர்களுக்குமானது! எனது உடல்நிலையை பார்த்துக் கொள்ள பணம் அனுப்புவதை நிறுத்துங்கள்.

    எனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. அந்த நாள் முதல் உலகெங்கும் உள்ள எனது அறக்கட்டளைகளுக்கு பக்தர்களும் சீடர்களும் பணத்தை அனுப்பி வருகிறீர்கள். இதை தயவுசெய்து உடனடியாக நிறுத்துங்கள்.

    பிரிதல்

    பிரிதல்

    இந்த பிரிதலால் நீங்கள் என்னை மீண்டும் பார்க்க முடியுமா இல்லை பார்க்க முடியாதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் உங்களுடைய தொடர்புகளை ஆன்மீகப் பயிற்சியின் மூலம் தொடர்பை உணர்கிறேன். இது சுகமான வலியாகவே உள்ளது. நான் சந்தித்து வருவது சுனாமியோ நிலநடுக்கமோ இல்லை.

     மனநிம்மதி

    மனநிம்மதி


    உங்கள் மன நிம்மதிக்காக எனக்கு பணம் அனுப்புகிறீர்கள். என்னுள் மிகவும் ஆழ்ந்து பரமசிவன் தங்கிவிட்டார். அவரது ஆற்றலை நான் சமாதி மூலம் பெறுகிறேன். எனவே பணம் அனுப்புவதற்கான நேரம் இதுவல்ல. எனக்கு பணம் அனுப்ப பக்தர்கள் தங்கள் சொத்துகளையே விற்கிறார்கள் என நான் கேள்விப்படுகிறேன்.

    பணம் வேண்டாம்

    பணம் வேண்டாம்

    எனது உடலை பார்த்துக் கொள்வதற்காக உலகெங்கும் உள்ள பக்தர்கள் பணம் அனுப்பாதீர்கள். நான் உயிருடன் நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றும் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அருணாசலேஸ்வரர் கோயிலில் அருணகிரி யோகோஸ்வராவின் படத்தை வீட்டில் வைத்து விளக்கேற்றி வழிபடுங்கள்.

    செல்பி

    செல்பி

    எனது மீது அன்பு செலுத்த விரும்பினால் பணம் அனுப்பாதீர்கள், அதற்கு பதில் நீங்கள் விளக்கேற்றி வழிபடும் செல்பியை எனக்கு அனுப்பி வையுங்கள். நான் கண்களை திறக்கும் போது உங்கள் செல்பிகளை பார்க்கிறேன் என கூறியுள்ள நித்தியானந்தா விளக்கேற்றுவதற்கான ஸ்தோத்திரங்களையும் அனுப்பியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+