கைலாசா தீவா? நீங்க வேற.. நடுக்கடலில் சிங்கம் பட வில்லன் "டேனி" போல் பதுங்கியிருக்கும் நித்யானந்தா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கைலாசா என்ற தீவெல்லாம் இல்லை. நித்யானந்தா நடுக்கடலில் ஒரு கப்பலில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்பெல்லாம் நித்யானந்தா குறித்து எப்போதாவது பேசப்படும். ஆனால் தற்போது அவரது உடல் மெலிந்து காணப்படுவதால் அவருக்கு என்னாச்சு, ஏன் அவ்வாறு இருக்கிறது என்பது குறித்து நாள்தோறும் தகவல்கள் வெளியாகின்றன.

இதற்கு தீனி போடும் வகையில் நித்யானந்தாவின் பேஸ்புக் பக்கத்திலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. தனது ஒவ்வொரு போஸ்ட்டிலும் தனக்கு ஒன்றும் இல்லை என கூறும் நித்தி, தன்னால் உட்கார முடியவில்லை என்கிறார்.

6 மாதங்கள்

6 மாதங்கள்

சாப்பிட்டு 6 மாதங்களாயிற்று, தூக்கமும் இல்லை என்கிறார். எதை சாப்பிட்டாலும் வாந்தி வருகிறதாம். ஆள் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக காணப்படுகிறார். நித்யானந்தா கைலாசாவுக்கு சென்ற போது தங்க கட்டிகளை கொண்டு சென்றார். அதை அமெரிக்காவில் உள்ள சிலர் மூலம் வங்கியில் சேமித்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நம்பிக்கை துரோகம்

நம்பிக்கை துரோகம்

இந்த பணத்தை யாரோ நம்பிக்கை துரோகம் செய்து திருடி விட்டார்கள் என சொல்லப்படுகிறது. கஷ்டப்பட்டு சேர்த்த பணம் வீணாகிவிட்டதால்தான் நித்யானந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். மேலும் தான் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளி என்பதால் எந்த நாட்டுக்கும் சென்று சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது.

Recommended Video

    பணம் அனுப்ப வேண்டாம்.. Nityananda-க்கு என்ன ஆச்சு? #Nithyananda | Oneindia Tamil
    சிகிச்சை

    சிகிச்சை

    அப்படியே எந்த நாட்டிற்கு சென்றாலும் சிகிச்சை பெற காசு இல்லை. கைலாசாவிலும் பெரிய மருத்துவ கட்டமைப்பு இல்லை என்பதை நித்தியே தனது பதிவில் தெரிவித்துள்ளார். மருத்துவ பரிசோதனை எல்லாம் நன்றாக இருக்கும் போது நித்திக்கு எதற்கு மருத்துவ சிகிச்சை என்ற கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. இதனால் நித்தி பக்தர்களிடம் பணம் பெறுவதற்காக உடல்நிலை குறித்து பொய்யான ஒரு தகவலை கூறி அனுதாபம் தேட முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

    பேஸ்புக் பதிவு

    பேஸ்புக் பதிவு

    அவரது பேஸ்புக் பதிவுகளில் சம்பந்தமே இல்லாமல் பணம் அனுப்பாதீர்கள், வீட்டை விற்று பணம் அனுப்பாதீர்கள் என கேட்கிறார். இது ஒரு புறமிருக்க, கைலாசா எங்கே இருக்கிறது என்றே தெரியாமல் நித்திக்கு எப்படி பக்தர்கள் பணம் அனுப்புகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத சீடர் ஒருவர் கூறுகையில் கைலாசா அமெரிக்காவிலும் இல்லை, ஆஸ்திரேலியாவிலும் இல்லை.

     நேபாள அரசின் கட்டுப்பாடு

    நேபாள அரசின் கட்டுப்பாடு

    நேபாள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இமயமலையின் அடிவாரத்தில்தான் அவர் இருக்கிறார். அவர் மட்டுமே சில சீடர்களுடன் தங்கியுள்ளார். இதைத்தான் பனிமலை, கடல்கள் , கதவு இல்லாத அறை என நித்தி சொல்லியிருக்கிறார். அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு ஒரு பெயரை வைக்க வேண்டும். போலீஸை குழப்ப வேண்டும் என்பதற்காகே பரமசிவன் இருக்கும் கைலாயத்தின் பெயரில் ஒரு தீவு என்பது போல் நித்தி பில்டப் கொடுக்கிறார். இது எங்களுக்கு அரசல் புரசலாக வந்த தகவல்தான். உறுதியானது இல்லை. என்றார். இந்த நிலையில் இமயமலையிலும் நித்தி இல்லை, அவர் நடுக்கடலில் கப்பலில் தங்கியிருக்கிறார் என்கிறார்கள் சிலர். இதில் எது உண்மை என்றே தெரியவில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+